பக்கம் எண் :

ஆராய்ச்சி உரை29


படுகின்றது. ஆதலால் இஃது ஒரு காலத்தில் சைவ ஆலயமாகவே இருந்திருத்தல்
வேண்டும். இந்தத் தலத்தில் ஒரே பீடத்தில் மூலவிக்கிரகமும், அதற்கு இருபுறத்திலும்
இரு தேவிமாரின் திருவுருவங்களும் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருப்பதுபோல்
வேறு எந்தத் திருமால் கோவிலிலும் காணப்படவில்லை. திருமுருகனாருடைய
படைத்தலைவராகிய 'வீரவாகு தேவரே' இம்மலையைக் காத்து வருகின்றனர்.
இக்கோவிலின் முகப்பில் உள்ள 'கருப்பண்ணசாமி' கோவிலுக்கும் எந்தக் காலத்திலும்
எவ்வகைத் தொடர்புங் கிடையாது. இந்தக் கோவிலின் விமானம் 'சோமசுந்தர
விமானம்' என்றும், மலையின் பெயர் 'இடபகிரி' என்றும் சொல்லப் பெறுகின்றன.
மலைநாட்டுத் தெய்வம் முருகனே ; ஆதலால் இது திருமுருகன் தலமே என்பது
நிலைபெறுகின்றது. சித்திரைப் பெருவிழாவில் 'திரு அழகர்' மதுரைத் திருநகருக்கு
எழுந்தருளி வரும்போது வழியிலெல்லாம் செய்யப்படும் வழிபாடுகள் அனைத்தும்
நக்கீர தேவரால் திருமுருகாற்றுப்படையில் கூறப்பெற்றுள்ள வழிபாடுகளுக்கு
எடுத்துக்காட்டாகவே இருக்கின்றன.

   'திரு அழகர்' என்ற பெயர் திருமுருகனுக்கு மறு பெயரே. திருமால் என்ற
சொற்பொருளோடு இது பொருந்தாது. கள்ளர் என்னும் மலைநாட்டு மக்களுக்கு
உரியவர் 'கள்ளழகப்பெருமான்' என்பதே.