காண்கிறோம். யாவருக்கும் விளங்கும் உவமையைப் பொருத்திய இவ்வாசிரியர் கவியருமை வியக்கத்தக்க தன்றோ? இன்னும் ஒரு கவியும் காட்டுவோம். சிவந்தான் மல்லைப் பல்லவன் என்றொரு வள்ளல் இவருக்கு ஆருயிர் நண்பராகவும் அருமைத் தமிழ்மக்கட் பண்பராகவும் அமைந்திருந்தார். அவரைப் புகழ்ந்து பல பாடல்கள் பாடிப் பரிசு பெற்று வாழ்ந்திருந்தனர்போலும். அப்பரிசுகளில் ஒன்று இரட்டைக் கடுக்கன். 'இரட்டைக் கடுக்கன்' என்பது காதிலணியுங் கடுக்கன் என்ற அணியில் மிகவும் நீண்டுள்ளது. தோள்வரை தொங்கியாடிக் கொண்டிருப்பது. அப்பணியைக் காதிற் பூண்டு பலரையும் சென்று கண்டு பாடிப் பரிசு பெற்று வாழ்ந்து வந்தார். மல்லைப் பல்லவனைப் போலப் பரிசில் வழங்குவோரைக் கண்டறியாது வருந்தி மெலிந்தார். ஈயாத பற்றுள்ள முடையவரிடம் சென்று கை நீட்டித் தலையைக் குலுக்கி யசைத்து அவரை மனமகிழச் செய்யப் பாடுபட்டார். பரிசில் கிடைத்திலது அவர் பூண்டிருந்த இரட்டைக் கடுக்கன் தலையைக் குலுக்கிப் பாடும்போதும் பேசும்போதும் கன்னத்திலடிப்பதையும் கண்டார். சிவந்தான் மல்லைப் பல்லவன் செயலை வியந்தார். இவ்விரட்டைக் கடுக்கன்களை எவ்வாறு பூட்டியிருக்கின்றான். காடு, மலை, செடி கடந்து போய்க் கண்டவர்களை யெல்லாம் பாடிக் காலங் கழிக்காதே என்று கன்னத்திலடித்துப் புத்தி புகட்டுகின்றனவே இவைகள்! அவனையே பாடி அசையாமல் அருகில் இருப்பது நலமல்லவா? பேராசையால் அலைவது பேதைமை என்பதை யுணர்ந்தார். அவ்வுணர்ச்சியால், "பாடுந் தமிழ்க்குச் சிவந்தெழுந் தான்மல்லைப் பல்லவர்கோன் காடுஞ் செடியுந் திரியா திரட்டைக் கடுக்கன்செய்து போடும்பொழுதென்ன பூட்டக மோவற்பப் புல்லரைக்கொண் டாடும் பொழுதிரு கன்னத்தி லேநின் றடிக்கின்றதே" | என்று பாடினார். இச்செய்யுளின் நயத்தைக் கூர்ந்து நோக்குங்கள். அற்பப் புல்லரைக் கொண்டாடும்பொழுது |