பக்கம் எண் :

34அழகர் கிள்ளைவிடு தூது


அக்கடுக்கன்கள் 'பாடாதே, பாடாதே !' என்று கன்னத்திலடிக்கின்றன. இவ்வாறு
அடிக்கும்படி அமைந்திருக்கின்றான். இஃது என்ன பூட்டகமோ? பொருத்தியிருக்கும்
இடம் என்ன அழகாக அமைந்திருக்கிறது ! நமக்கு அறிவு புகட்டுவதற்காகவே செய்த
செயல் போலும் இஃது என்று வியப்பது போலத் தோன்றுகிறது. இத்தகைய அருமைக்
கவிகள் பல புனைந்து வாழ்ந்தனர் என நாம் அறிகின்றோம். தனிப்பாடற்றிரட்டில்
இவர் செய்யுட்கள் பல வந்துள்ளன. அவர் திருநெல்வேலி சென்றபோது
காந்திமதியம்மையைக் கண்டு 'தன் கவலையைச் சிவ பெருமானுக்குக் கூறு' மாறு பாடித்
துதித்தனர் எனத் தெரிகிறது.
 
"ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீதுன் னருகிருந்து
நீமுத்தந் தாவென் றவர்கொஞ்சும் வேளையி னித்தநித்தம்
வேய்முத்த ரோடென் குறைகளெல் லாமெல்ல மெல்லச்
சொன்னால்
வாய்முத்தஞ் சிந்தி விடுமோநெல் வேலி வடிவன்னையே."

இஃது அப்பாடல்,

   வேய்முத்தர் - மூங்கிலில் தோன்றியவர் (சிவபெருமான்). அத்தலத்தில் மூங்கிலின்
முளைத்ததாகத் தல புராணங் கூறுகிறது. வடிவன்னை, வடிவம்மை என்பன உமையின்
பெயர். யாவர்க்கும் விளங்குமாறு உலகியல் புணர்த்தித் தாயை வணங்கிய
தகைமையாயமைந்த சொற்சுவை பொருட்சுவை பாராட்டற்பாலன. இவர் பாடிய கவிகள்
யாவும் எவர்க்கும் இன்பம் ஊட்டுவனவே. சொக்கநாதர், அங்கயற்கண்ணியைத்
துதித்துப் பாடிய பாடல்களே மிகுதியும் காணப்படுகின்றன. அதனால் இவர்
சொக்கநாதர் என்ற பெயருக்கேற்பச் சிவபத்தியிற் சிறந்தவர் என்று தெரிகிறது. இவர்
மும்மணிக்கோவை ஒன்றும், யமகவந்தாதி ஒன்றும் மதுரைப் பதியைக் குறித்துப்
பாடினர் எனத் தெரிகிறது. இராமேச்சுரத்தின்மேல் தேவையுலா என்ற நூலும்,
திண்டுக்கல்லிற் கோயில்