20 | நட்டா ரெனினும் நடந்துவரும் பூசைதனை விட்டார் முகத்தில் விழித்திடாய்-வெட்டும்இரு வாளனைய கண்ணார் வளர்க்கவளர் வாயுறவில் லாளனைநீ கண்டால் அகன்றிடுவாய்-கேளாய் இருவடிவு கொண்டமையால் எங்கள் பெரிய திருவடிகள் வீறெல்லாஞ் சேர்வாய்-குருவாய்ச் செபதே சிகர்க்கெல்லாந் தென்னரங்கர் நாமம் உபதேச மாக உரைப்பாய்-இபமுலையார் சித்தங் களிகூரச் செவ்விதழில் ஆடவர்போல் முத்தங் கொடுக்க முகங்கோணாய்-நித்தமவர் |
20 | செவ்விதழுன் மூக்காற் சிவந்ததோ உன்மூக்கில் அவ்வித ழின்சிவப்புண் டானதோ-செவ்வியிழந் தண்டருக்குந் தோற்றா அடல்வேளா னானைநீ கொண்டிழுத்தால் ஆகுங் குறையுண்டோ-உண்டடக்கி ஆயுவை நீட்ட அருந்தவத்தோர் பூரகஞ்செய் வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்-தேயசொளிர் மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மாதுஞ் சங்கரியும் கைப்பிடிக்க நீவங் கணம்பிடித்தாய்-மெய்ப்பிடிக்கும் பச்சைநிறம் அச்சுதற்கும் பார்ப்பதிக்கு முன்றனக்கும் இச்சைபெற வந்தவிதம் எந்தவிதம்-மெச்சும் |
25 | குருகேயுன் னாக்குத்தான் கூழைநாக் கான தரிகீர்த் தனத்தினால் அன்றோ-தெரிவையர்கள் ஆர்த்தவிரல் உன்முகமொப் பாகையா லேகையைப் பார்த்து முகமதனைப் பாரென்பார்-சீர்த்திக் கிரியையிலே காணுங்காற் கிள்ளை அடையாத பெரியதனம் வீணன்றோ பேசாய்-தெரியுங்கால் தேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும் வீறுபெறு மேநீ விரும்பினாற்-கூறில் அனம் உன்னுடைய வூணன்றோ ஊதப் பறந்துபோம் சின்னவடி வன்றோ செழுங்குயிலும்-என்னே |