பக்கம் எண் :

40அழகர் கிள்ளைவிடு தூது


35 முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும்
மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ-எதிரும்
கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும்புறா வுக்குமொரு வாயோ-விரும்புமயில்
உற்ற பிணிமுகமே உன்போற் சுகரூபம்
பெற்ற பறவை பிறவுண்டோ-கற்றறியும்
கல்வியுங் கேள்வியுங் கைக்கொண்டாய் சாரிகைக்குன்
செல்வமதி லள்ளித் தெளித்தாயோ-சொல்வேத
மென்பரிநா லுக்கும் விதிசா ரதிவில்வேள்
தன்பரி யேயுனக்குச் சாரதியார்-வன்போரில்
40 மேவுஞ் சிவன்விழியால் வேள்கருகி நாண்கருகிக்
கூவும் பெரிய குயில்கருகிப்-பாவம்போல்
நின்று மறுப்படுநாள் நீதா னடுப்படையிற்
சென்று மறுப்படா தேவந்தாய்-என்றுமாக்
காய்க்குங் கனியல்லாற் காய்பூவென் றாறாக்கு
மூக்கு மறுப்பாய் முகம்பாராய்-ஆக்கம்
வரையாமல் நன்மை வரத்தினை நல்கும்
அரிதாளை நீவிட் டகலாய்-இருகை
உனக்கில்லை யுன்சிறகி ரண்டுமெனக் கில்லை
எனக்கும் உனக் கும்பேதம் ஈதே-மனைக்குள்
45 இதமாய் மனிதருட னேபழகு வாயன்
பதனான் முறையிட் டழைப்பாய்-மதுவுண்
டளிப்பிள்ளை வாய்குழறு மாம்பரத்தி லேறிக்
களிப்பிள்ளைப் பூங்குயி்லும் கத்தும்-கிளிப்பிள்ளை
சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர்கொண்டாய்
பின்னத்தைப் போலுமொரு பேறுண்டோ-அன்னமின்றிப்
பால்குடிக்கும் பச்சைக் குழந்தைநீ யானாலும்
கால்பிடிப்பார் கோடிபேர் கண்டாயே-மால்பிடித்தோர்
கைச்சிலைவே ளால்வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ