பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது41


  பச்சிலை ரூபம் படைத்திருந்தாய் - அச்ச
50 மனப்பேதை யார்மால் வனஞ்சுடவோ வன்னி
எனப்பேர் படைத்தாய் இயம்பாய்-அனத்தை
நிலவோவென் பார்கள் நெடுந்துயர்வே ழத்தைக்
கொலவோ வரிவடிவங்கொண்டாய் - சிலைநுதலார்
கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவெடுத்தாய் கிற்பாய்நீ-உள்ளம்
மிகவுடைய மாதர் விதனங் கெடவோ
சுகவடிவு நீகொண்டாய் சொல்லாய்-தகவுடைய
தத்தை யடைந்தவரே தத்தையடை யாரென்னும்
வித்தையடைந் தாய்உனையார் மெச்சவல்லார்-முத்தமிழோர்
55 மாரதி பாரதியார்க் குன்னையுவ மானிப்பார்
ஆரதிகம் ஆர்தாழ் வறைந்திடாய்-ஊரறிய
நெய்யிற்கை இட்டாலு நீதான் பசுமையென்றே
கையிட்டுச் சுத்தீ கரிக்கலாம்-மெய்யின்
வடிவும் வளைந்த மணிமூக்கு மாயன்
கொடியி லிருப்பவர் தங் கூறோ-நெடியமால்
விண்டு தறித் தூது வேணுகா னத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ - கொண்டசிற
கல்லிலங்கு மெய்யானை அன்றழித்து வீடணன்போய்த்
தொல்லிலங்கைக் கட்டுபுதுத் தோரணமோ-நல்வாய்
60 மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக்
குழலின் இசைதானோ கூறாய் - அழகுக்
கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக்
குளிப்பிள்ளாய் இன்பரசக் குஞ்சே-வளிப்பிள்ளை
தன்னைத்தாய் போலெடுத்துச் சஞ்சரிக்குஞ் சம்பத்தாய்
பின்னைத்தாய் கையிலுறை பெண்டத்தாய்-பொன்னொத்தாய்
முத்திநக ரேழிலொன்றே முத்தமிழ்வல் லாறிலொன்றாய்
ஒத்ததனித் தவ்வரிப்பே ருற்றதொன்றே-சுத்தமுறும்