| ஐந்துபூ தத்திலொன்றே யானபடை நான்கிலொன்றே முந்துமுத லானபொருண் மூன்றிலொன்றே - வந்த |
65 | இருபயனி லொன்றே இமையே விழியே பருவ விழியிலுறை பாவாய் - ஒருநாரில் ஏற்றுந் திருமாலை யெய்தப்போய் ஊரெல்லாம் தூற்றுமலர் கொண்டகதை சொல்லக்கேள் - தோற்றி |
| அழகர் மாண்பு |
| அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப் பெரியதொரு தூணிற் பிறந்து-கரிய வரைத்தடந் தோள் அவுணன் வன்காயங் கூட்டி அரைத்திடுஞ் சேனை அருந்தி-உருத்திரனாய்ப் பண்ணுந் தொழிலைப் பகைத்துநிலக் காப்புமணிந் துண்ணும் படியெல்லாம் உண்டருளி-வெண்ணெயுடன் |
70 | பூதனை தந்தபால் போதாம லேபசித்து வேதனையும் பெற்று வெளிநின்று-பாதவத்தைத் தள்ளுநடை யிட்டுத் தவழ்ந்து விளையாடும் பிள்ளைமை நீங்காத பெற்றியான்-ஒள்ளிழையார் கொல்லைப்பெண் ணைக்குதிரை யாக்குந் திருப்புயத்தான் கல்லைப்பெண் ணாக்குமலர்க் காலினான்-சொல்கவிக்குப் பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்க்கா ஆர முதுகடைந்த அங்கையான்-நாரியுடன் வன்கா னகங்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு மென்கா னகங்கடந்த வீட்டினான்-என்காதல் |
75 | வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன்மிதந்தோன் உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான்-தெள்ளிதின் வெட்ட வெறுவெளியி லேநின்றுந் தோற்றாதான் கிட்ட விருந்துங் கிடையாதான்-தட்டாதென் எண்ணிலே மாய னெனும்பேரி னாலொளிப்போன |