பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது43


  கண்ண னெனும்பெயராற் காண்பி்ப்போன்-எண்ணுங்கால்
எங்கு மிலாதிருந்தே எங்கு நிறைந்திருப்போன்
எங்கு நிறைந்திருந்தே எங்குமிலான்-அங்கறியும்
என்னை எனக்கொளித்தியானென்றுங் காணாத
தன்னை யெனக்கருளுந் தம்பிரான்-முன்னைவினை
80 கொன்று மலமாயைக் கூட்டங் குலைத்தென்னை
என்றுந் தனியே இருத்துவோன்-துன்றுபிர
மாவும்நான் மன்னுயிரும் நானவ் விருவரையும்
ஏவுவான் றானும்நான் என்றுணர்த்தக்-கோவலர்பால்
ஆனுமாய் ஆன்கன்றும் ஆகி அவற்றைமேய்ப்
பானுமாய் நின்ற பரஞ்சோதி-மாநகரப்
பேரிரு ணீக்கப் பெருந்தவம்வேண் டாஉடலில்
ஆருயிர் கூட்ட அயன்வேண்டா-பாருமெனச்
சங்கத்தொனியுந் தடங்குழ லோசையெனும்
துங்கத் தொனியுந் தொனிப்பிப்போன்-பொங்குமலை
85 மோதும் பரனாதி மூலம் இவனென்றே
ஓதுங் கரியொன் றுடையமால்-மூதுலகைத்
தந்திடுவோ னுந்துடைப்போன் றானுநா னென்றுதிரு
உந்தியால் வாயா லுரைத்திடுவோன்-பைந்தமி்ழால்
ஆதிமறை நான்கையுநா லாயிரத்து நற்கவியால்
ஓதும் பதினொருவர் உள்ளத்தான்-பாதமெனும்
செந்தா மரைமலரிற் சிந்திய தேன்போல
மந்தா கினிவழியும் வண்மையான்-சந்ததமும்
ஆன்ற வுலகம் அறியும் அறி யாமையுமாத்
தோன்றத் துயிலாத் துயில்கொள்வோன்-ஈன்றவளைத்
90 தெள்ளு மணிவாயிற் காட்டிச் செகம்புறமும்
உள்ளு மிருப்ப துணர்வித்தோன்-கொள்ளைக்
கவற்சிதரு சென்மக் கடலிற் கலந்த
அவிச்சையுவர் வாங்கமுகி லானோன்-நிவப்பா