பக்கம் எண் :

44அழகர் கிள்ளைவிடு தூது


  மடங்கும் பரசமய வாத நதிவந்
தடங்கக் கருங்கடலு மானோன்-உடம்பிற்
புணர்க்க ஒருகிரணம் போலுமெனை யுங்கொண்
டணைக்க மணிநிறமு மானோன்-பணைக்கும்
விசைப்பூ தலவூசன் மீதிலிருப் போனும்
அசைப்போனுந் தானாகும் அண்ணல்-இசைத்திசைத்
95 தூன்பிடிக்கும் வேடர் ஒருபார்வை யால்நூறு
மான்பிடிக் கின்ற வகையென்னத்-தான்படைத்த
என்பிறவி யெண்பத்து நான்குநூ றாயிரமும்
தன்பிறவி பத்தாற் றணித்திடுவோன்-முன்புபுகழ்ந்து
 

பத்துறுப்பு

 

மலை

 

 



100

ஏத்திருவர் நீங்கா திருக்கையா லேகேச
வாத்திரி யென்னு மணிபெற்றுக்-கோத்திரமாம்
வெங்காத் திரஞ்சேர் விலங்குகளை மாய்த்திடலாற்
சிங்காத் திரியென்னுஞ் சீர்மருவி-எங்கோமான்
மேய்த்த நிரைபோல வெற்புகள்எல் லாஞ்சூழ
வாய்த்த நிரையில்ஒரு மால்விடையாய் - பார்த்திடலால்
இன்னியம் ஆர்க்கும் இடபகிரி யென்னும்பேர்
மன்னிய சோலை மலையினான்-எந்நாளும்
 

ஆறு

  பொற்சிலம்பி லோடுஞ்சாம் பூநதம்போன் மாணிக்க
நற்சிலம்பி லோடும் நதியாகிக்-கற்சிலம்பில்
இந்திரன் போலும் இடபா சலம் அவன்மேல்
வந்தவிழி போலும் வளச்சுனைகள்-முந்துதிரு
மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போல வருநூ புரநதியான்-சீலமுறும்