| நாடு |
105 | பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகட்கு முன்னிருகை காது முலை முகங்கால்-பின்னகங்கண் காட்டும் அவற்றுட் கனகவரை மீதுபுகழ் தீட்டும் புனனாடுந் தென்னாடும்-நாட்டமாம் அந்நா டிரண்டில் அருள்சேர் வலக்கணெனும் நன்னாடாந் தென்பாண்டி நாட்டினான்-பொன்னுருவச் |
| நகர் |
110 | சந்த்ரவடி வாஞ்சோமச் சந்திரவி மானத்தை இந்திரவி மானம் இது என்றும்-மந்த்ரவிரு துக்கொடி யேறு துசத்தம்பம் வல்லிசா தக்கொடி யேறுகற்ப தாருஎன்றும்-மிக்கோர்க் கொருவாழ்வா னோனை உபேந்திரனே யென்றும் திருமாலை யாண்டானைத் தேவ-குருவென்றும் நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை விண்ணவர்கோன் ஆதி விபுதரென்றும்-எண்ணுதலால் ஆர்பதி யான அமரா பதிபோலும் சீர்பதி யான திருப்பதியான்-மார்பிடத்தில் |
| தார் |
| எண்ணுங் கலனிறத்தோ டிந்திரவிற் போற்பசந்த வண்ணந் தருந்துளப மாலையான்-உண்ணின்று |
| கரி |
115 | உருக்கும் வயிணவமா மோங்குமதம் பொங்கத் திருக்கொம்பு தான்றுதிக்கை சேர-நெருக்கிய பாகமொத்த வைகான தம்பாஞ்ச ராத்திரமாம் ஆகமத்தின் ஓசைமணி யார்ப்பெடுப்ப-மோகமறு மட்டும் பிணிக்கும் வடகலையுந் தென்கலையும் கட்டும் புரசைக் கயிறாக-விட்டுவிடா |