பக்கம் எண் :

46அழகர் கிள்ளைவிடு தூது


 

ஆனந்த மான மலர்த்தாள்கண் டத்துவி
தானந்த மென்றகளி யானையான்-தானந்த

 

பரி

  வர்க்கத் துடனெழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவுநலங் காண்பித்துச்-சொர்க்கத்தில்
ஏறுங் கதிகாட்டி எய்தும் அணுத்தோற்றி
வீறும் பலகலையும் வென்றோடி-ஆறங்கம்
சாற்றிய தன்னங்க மாய்க்கொண்டு தாரணியிற்
போற்றிய வேதப் புரவியான்-பாற்கடலிற்
 

கொடி

120 புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும்
சக்கரமும் போலத் தலைசுழன்று-தொக்கவிசை
வற்றும் பொழுதுவிழ வாசுகியைச் சேடனைப்
பற்றுங் கருடப் பதாகையான்-சுற்றியதன்
 

முரசம்

  குன்றில் அரி யுங்கரியுங் கொண்மூவு நின்றதிர
முன்றில் அதிர்மும் முரசினான்-என்றும்
 

ஆணை





125
அவனசை யாமல் அணுவசையா தென்னும்
தவநிலை யாணை தரித்தோன்-நவநீதம்
மேனியிற் சிந்தியதும் மென்கையி லேந்தியதும்
வானில் உடுவும் மதியுமெனத்-தானுண்டோன்
செங்கதிரும் வெண்கதிரும் என்னத் திருவிழியும்
சங்கமுஞ் சக்கரமுந் தாங்கினோன்-அங்கணுல
குண்டகனி வாயான் உறையுந் திருவயிற்றான்
கொண்ட படியீன்ற கொப்பூழான்-மண்டி