பக்கம் எண் :

4பதிப்புரை


யங்களைக் கற்றுப் பின் பேரிலக்கியங்களையுங் கற்றுக் கேட்டு வருதல் இன்றியமையாதது.

ழுஅழகர் கிள்ளைவிடு தூதுழு என்பது தூது நூல்களுட் சிறந்ததொன்று. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த பலபட்டடைச் சொக்கநாதப் புலவராற் பாடப்பட்டது இது. இந்நூலினை முதலில் ஏட்டிலிருந்து அச்சி்ற்குக் கொண்டுவந்த பெருமையுடையவர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள். அச்சேறிய காலமுதல் இந் நூலுக்கு விளக்க உரை வரைந்து வெளியிட ஒருவரும் முன் வந்திலர். குறிப்புரையுடன் இதுகாறும் இந்நூல் உலவியது. வித்துவான் வகுப்புக்கு அடிக்கடி பாடப் புத்தகமாக வைப்பது தெரிந்து, சிறந்த முறையில் விளக்க உரை எழுதி இஞ்ஞான்று அச்சிற் பதித்தனம். மாணவர் பலர்க்கும் மற்றைத் தமிழ்ப்பற்றுடைய பலர்க்கும் இந்நூல் பயன்படும் எனக் கருதுகின்றோம். எம் கழகவாயிலாக இத்தூதுநூல் இப்போதுதான் வெளிவருகின்றது.

தமிழன்பர் பலரும் இந்நூலின் அருமை பெருமை கண்டு மகிழ்ந்து வரவேற்பரெனக் கருதுகின்றோம். பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் இதனை வாங்கியும் வாங்குவித்தும் கற்றும் கற்பித்தும் பயனெய்துக.

 

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.