| விட்டுக் கறப்பதையும் விட்டீரோ-கிட்டப்போய் மென்பால் தெறித்த வியன்முலையைப் பாற்குடமென் றன்பால் எடுத்த தறியீரோ-மின்போல்வார் செவ்விதழின் மேலே தெறித்தவெண்ணெ யுண்பதுபோல் அவ்விதழை யுண்ட தயர்த்தீரோ-செவ்விதழை குன்றன் றெடுத்தீர் குளிரும்அமு தங்கடைந்தீர் சென் றன்று பாம்பில்நடஞ் செய்தீரே-என்றென்று |
| சோலைமலை யடைதல் |
185 | கொண்டபஞ் சாயுதன்மேற் கொள்கை பெறத்தேனூர் மண்டபஞ் சார்வாய் வலங்கொண்டு-பண்டை விரசையுடன் வைகுந்த வீடும்இது என்னப் புரசைமலை காத்தோன் புகுந்தான்-வரிசை உபசாரங் கொண்டருளி ஓர்சிவிகை மீது தபசாரஞ் சீபதியைச் சார்ந்தான்-இபமுண்ட |
| தலைவி தன் நிலைமை கூறுதல் |
190 | வெள்ளிற் கனியானேன் வேதனை யீன்றவன்றான் உள்ளிற் கனியானே ஊர்ந்துவரும்-பிள்ளைமதி செவ்வை மதியோ திரைக்கடல் வாய்சிறிதோ கொவ்வையித ழார்மொழிதான் கூற்றன்றோ-எவ்வமுறும் காற்றேரி னானும்ஒரு காலன்அன் றோவுருக்கி ஊற்றாத சேமணியும் ஒன்றுண்டோ-வேற்றுக் கிளையோடு வாடிக் கிடந்தாலுஞ் சுட்டுத் துளையாக்குழலும் உண்டோ சொல்வாய்-கிளியரசே |
| தலைவி கிளிக்கு முகமனுரை மொழிதல் |
| என்கூடு பொன்கூடும் இந்த நிறத்தினால் உன்கூடும் என்கூடும் ஒன்றுகாண்-என்கூட்டில் மாங்கனி யுண்டு வளஞ்சேர் செழுங்கொவ்வைத் தீங்கனி் யுண்டா சினியுண்டு-பாங்கிற் |