195 | குழையுமன முண்டு குழம்பிய பாலுண் டுழையே தெளிபாலு முண்டு-விழைவறிந் தூட்டுவேன் உன்னை யுருப்பசியா யென்னநலங் காட்டுவேன் பட்டாடை யாற்றுடைப்பேன்-கூட்டில் அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப் புரைதீர் நறையும் புகைப்பேன்-அருகே இளவெயிலிற் காய்வித் தெடுத்தொருகான் முத்தி வளைபயில் கையின்மேல் வைத்துத் துளபமணி ஈசன் றிருநாம மெல்லாம்என் போல்எனக்குப் பாசந் தொலையப் பயிற்றுவேன்-பேசென்றே |
| வேறு பறவை தூது கூறா வென்றல் |
200 | ஈடுபட்ட வெள்ளை எகினத்தைத் தூதுவிட்டாற் சூடுபட் டார்துணிந்து சொல்வாரோ-கூடுகட்டி அன்பாய் வளர்த்ததா யார்க்குதவாக் கோகிலந்தான் என்பா லருள்வைத் தியம்புமோ-தன்பேர் அரியென்று சொன்னா லளியென்று சொல்லும் வரிவண்டு பேசி வருமோ-விரகஞ்செய் வன்கால திக்கின் மலைவா யிருக்கின்ற தென்காலும் என்காதல் செப்புமோ-பொன்காதல் வண்டலையுந் தாரான்முன் மாதரையெல் லாந்தூற்றும் கொண்டலையுந் தூதுவிடக் கூடுமோ-உண்ட படியேழுங் காக்கும் பரங்கருணை யான்முன் கொடியோரும் போவாரோ கூறாய்-அடியார்கள் |
| தத்தையே ! நீதான் தகுதி என்றல் |
205 | அங்கிருந்தாற் கீர்த்தனஞ்செய் வாயடுத்த நாச்சியார் பங்கிருந்தாற் கையிற் பறந்திருப்பாய்-எங்கிருந்து வந்தாயென் றான்மா லிருஞ்சோ லையிலிருந் தெந்தா யுனைத்தொழவந் தேனென்பாய்-அந்தச் |