பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது53




 
சவுந்தர வல்லியெனுந் தற்சொரூ பிக்கும்
உவந்தலர்சூ டிக்கொடுத்தா ளுக்கும்-சிவந்த
கடுகிலே சங்கோபங் காணாம லென்மால்
வடுகிலே சொல்வாய் வகையாய்-அடுகிலே
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதா னந்தரணி
கொங்கெடுக்குந் தாமங் கொடுவருவாய்-அங்கடுக்கின்
 

இடமும் அமையமும் எடுத்துரைத்தல்

210









215









220
ஓருகத்தில் ஆலாகி யோருகத்தி லேஅரசாய்
ஓருகத்தி லேவில் லுவமாகி-ஓருகத்திற்
புத்திர தீபமுமாய்ப் புங்கவர்க்கா றாந்தருவாய்ச்
சத்தி தருமோர் தருவுண்டு-மொய்த்த
ஒருகோடி காவுண் டொருகோடி யாறுண்
டொருகோடி பூஞ்சுனையு முண்டு-திருமால்
அறங்காக்கும் யோகிகள்போல் அல்லும்பகலும்
உறங்காப் புளிதானும் உண்டு-திறஞ்சேர்
பிதாமக னோடுறையும் பெற்றி விளங்கப்
பிதாமகன் வந்துபுகழ் பேசச்-சதாகால
முந்திரமாய் வாழும் உபேந்திரனங் கில்லையென
இந்திரனார் வந்தங் கினிதிறைஞ்சப்-பிந்திய
தம்பியர் மூவருக்குந் தானே யரசீந்த
நம்பி திருத்தாளை நம்பினோர்-வெம்பிறவித்
தேகம் பவித்திரஞ்செய் சீரங்க ராசபட்டர்
ஆகும்ப்ர சித்தராம் அர்ச்சகரும்-மோகமுறும்
கங்குன் மலமாயை கன்மம் விளங்காமற்
செங்கையி லோங்குதிரி தண்டேந்திச்-சங்கையறச்
செய்யுந் திருமா லிருஞ்சோலைச் சீயரென
வையம் விளங்கவரு மா தவரும்-பொய்யில்லா
ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட் டென்றொருப
மானதீ பங்காட்டி வந்துநின்று-மேனாளில்