பக்கம் எண் :

54அழகர் கிள்ளைவிடு தூது










225

 





 


230



 

முத்தமிழ்க்குப் பின்போவார் முன்போகப் பின்போன
அத்தன் றிருமாலை யாண்டானும்-பத்தியினால்
வையங்கார் வண்ணனையே வாழ்த்த வருந்தோழப்
பையங்கா ரென்னும்ஆ சாரியரும்-மெய்யன்பாம்
சிட்டர்க டேவர்க ளாகத் தினம்பரவும்
பட்டர்களாம்வேத பாரகரும்-விட்டுவெனும்
சோதிகரு ணைக்கடற் றோன்றிக் கரசர
ணாதியுடன் வந்த அமுதாரும்-மூதுலகிற்
றண்ணந் துழாயழகன் றங்குந் திருமலைபோல்
நண்ணுந் திருமலை நம்பிகளும்-உண்ணின்ற
மாலைமலை சோலை மலையையே நம்புதலாற்
சோலைமலை நம்பியெனுந் தூயோரும்-மேலை
விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம்
தருஞ்சட கோபநம்பி தாமும்-பெருஞ்சீர்
வரியெழுதிக் கற்றதிரு மாலிருஞ் சோலைப்
பிரியரெனுஞ் சீர்கருணப் பேரும்-கிரியிலிருந்
தாளுங் கடவுள் அருளே துணையாயெந்
நாளுஞ்சீ காரியஞ்செய் நாயகரும்-தாள்வணங்க
ஆர்த்ததிரு வோலக்க மாயிருப்பன் அப்பொழுதுன்
வார்த்தை திருச்செவியில் வாயாது-சேர்த்தியிலே
மெல்ல எழுந்தருளும் வேளைபார்த் தவ்வேளை
சொல்ல எழுந்தொருவர் சொல்லாமுன்-வெல்லுமதன்
அம்பலர் தூற்ற அடர்த்து வருமுன்னே
வம்பலர் தூற்ற வருமுன்னே-கும்பமுனி
வாயி னுரையடங்க வந்த கடலடங்கத்
தாயின் உரையடங்கத் தத்தையே-நீயுரையாய்
 

மருமாலை வாங்கி வா என்றல்

 
உன்பேர் சுவாகதமென் றோதுகை யாலுனக்கும்
அன்பேர் சுவாகதமுண் டாகுங்காண்-முன்பொருநாள்