பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது55


235




 

 

239

கோசலை கையிற் குருசில் உனைப்புகழ்ந்து
பேசின் உனைப்புகழ்ந்து பேசாரார்-நேசமுடன்
எம்முடைய மாலை இருபுயத்து மாலைகேள்
உம்முடைய மாலை உதவீரேல்-அம்மைதிருக்
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மின்என்பாய்-நீதி
அடுப்பவர் யாவர்க்கும் ஆடித் தியாகம்
கொடுப்பவன் இல்லையென்று கூறான்-தடுக்கும்
அருமாலை நீக்கும் அழகன் புயத்து
மருமாலை நீவாங்கி வா.

 

- -