பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

100

எண

        எண்பொருள் நாயகன் தன்னுடனே,
            ஏழுல கங்களும் ஈன்றெடுத்த
        பெண்பெரு மாள்அடி பாடினவே;
            பெருமாள் அரங்கரைப் பாடினவே.
              

(681)

‘எண் பொருள் நாயகன்’: எண்ணத்திற்கும், பொருளுக்கும், அன்றி எண்ணக்கூடிய பொருளுக்கெல்லாம், தலைவன்.

        அணங்கு மகிழநின் றாடினவே;
            ஆர்த்தெழுந்து ஆர்த்தெழுந்து ஆடினவே;
        துணங்கை அருநடம் ஆடினவே;
            சுருதிகள் பாடிநின் றாடினவே.                   

(682)

        தோகை அசையநின் றாடினவே;
            தும்பை புனைந்துநின் றாடினவே;
        வாகை சூடிநின் றாடினவே;
            வானவர்ப் பாடிநின் றாடினவே.      
            

(683)