பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

99

        பகையொடு பட்ட அசுரரெலாம்,
            பைங்கட் சினஅரி பொங்கழல்வாய்
        நகையொடு பட்டமை பாடீரே!
            நம்பசி கெட்டமை பாடீரே! 
                   

(673)

        பள்ளியில் வைத்ததைப் பாடீரே!
            பாலன்அன் பானதைப் பாடீரே!
        தெள்ளிய சிந்தையைப் பாடீரே!
            செப்பின நாமமும் பாடீரே!  
                  

(674)

‘தெள்ளியசிந்தை’: பிரகலாதனுடையது.

        சீறிய தந்தையைப் பாடீரே!
            செய்த கொடுமையைப் பாடீரே!
        ஆறி இருந்தமை பாடீரே!
            அஞ்சாத நெஞ்சனைப் பாடீரே!       
         

(675)

‘அஞ்சாத நெஞ்சன்’: பிரகலாதன்

        “காண்!”என்று நின்றமை பாடீரே!
            “காட்டு”என்று வந்தமை பாடீரே!
        தூண்நின்ற சோதியைப் பாடீரே!
            தோற்றிய சீற்றமும் பாடீரே!          
      

(676)

        இடந்த திருஉகிர் பாடீரே!
            எடுத்தகை ஒன்றென்று பாடீரே!
        கிடந்த திருமடி பாடீரே!
            கேட்டார் திருவடி பாடீரே!             
       

(677)

‘கிடந்த திருமடி’: இரணியன் கிடந்த திருமடி

        என்றென்று நின்றுஇசை பாடினவே;
            இரணியன் தோற்றமை பாடினவே;
        வென்ற செருக்களம் பாடினவே;
            வீரத் திருப்புயம் பாடினவே.
                  

(678)

        அந்தணர் தங்கள் மனத்தவத்தால்
            அவ்உலகத்திருந்து, இவ்உலகம்
        வந்த திருவடி பாடினவே;
            வடதிருக்கோபுரம் பாடினவே.       
           

(679)

        சோலை அரங்கரைப் பாடினவே;
            துய்ய முறுவலைப் பாடினவே;
        சீலம் மகிழ்ந்துஇசை பாடினவே;
            திருவின் உருவையும் பாடினவே.     
             

(680)