பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

98

New Page 1

        கொம்புஒலிப் பாரைப் போலக்,
            குவிந்து இரு கொடிறும் வீங்கச்,
        செம்புனல் பசுங்கூழ் கொட்டச்
            செவியெலாம் திறக்க உண்டே,                

(666)

    பசியால் அடைத்திருந்த காதுகள் திறந்தன.
‘செம்புனல் பசும் கூழ்’: இரத்தம் பெய்து அட்ட பதமான கூழ்.

        கோல்புரை வெளியும் இன்றிக்
            குடர்நி ரம்பியபேய், கூழால்
        தோல்புரை வெளிய டங்கத்
            துருத்திபோல் விம்ம உண்டே,     
          

(667)

‘கோல் புரை’: குச்சி பொருந்தும்

        மாயவெம் பகைஞர் புண்ணீர்
            வடித்ததண் ணீர்குடித்தே,
        தீய வன் பசிநோய் கெட்டுத்
            திடுக்கெனத் தேக்குமிட்டே, 
                

(668)

        பேயெலாம் பூதம் என்னப்
            பெருத்தன எனில்,பருத்த
        மாயவான் பூதம் உண்ட
            வடிவினை உரைக்கல் ஆமோ!

(669)

        பேசலாப் பெருங்கூழ் உண்ட
            பேயெலாம், குருதி யாற்றில்
        ‘பூசலாம்’ என எழுந்த
            பூசலைப் புகலல் ஆமோ?”                

(670)

        அவ்வகை பூசல் ஏறி
            ஆறிய கணங்கள் எல்லாம்,
        செய்வகை அறிகி லாது
            செருக்கின நெருக்கி நின்றே,       
         

(671)

        இதயமாக் கமல மொட்டின்
            இன்பசும் பாக்கும், யாக்கை
        தி்தையுமாக் குரதுரங்கச்
            செவிச் சுருள் இலையும்தின்றே, 
               

(672)

    கலிங்கத்துப்பரணி (580)யில் குதிரைக்காது வெற்றிலை, குதிரைக்குளம்பு பாக்கு, வீரர் கண்ணின் மணி சுண்ணாம்பாகக் கூறுவார்.