பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

97

        தினமணிக்கு அணிய ஆன
            சிகரவான் கோபுரத்துக்
        கனமணிக் குடங்கள் வாங்கிக்
            கரகமாம் எனநிறைத்தே, 
                     

(658)

        ஓடியகுருதி ஆற்றில்
            ஒட்டக முதுகின் வட்டச்
        சாடியின்மு கந்து, முன்னே
            சமைத்ததண் ணீர்அமைத்தே,   
             

(659)

        சொன்னசா மந்தப் பேயைச்
            சூழ்ந்தவாய், இறந்த ஆனைக்
        கன்னசா மரங்கள் வாங்கிக்
            கரங்களால் அசைப்பக் கண்டே,    
            

    (660)

    ‘கன்ன சாமரங்கள்’: யானையில் காதில் சாமரம் அணிதல் மரபு. ‘மெய்ச் செவிக்கவரி தூங்க’ ( கந்தபுராணம் ) அன்றி, யானையின் காதாகிய சாமரம்.

        கோலவட் டப்ப தாகைக்
            குழாம்கொடு, குறள்கள் எல்லாம்
        ஆலவட் டங்கள் வீச,
            அணங்குஅமுது ஆர்ந்த பின்னே,        
   

(661)

        பரிகலம் பரித்த பல்பேய்
            பதறின, பசிக்குத் தக்க
        விரிகலம் தேடி ஓடி,
            வீழ்ந்தபொற் கடகு எடுத்தே,        
       

(662)

        இருமிடா பந்தி என்னா
            இடஇட வேறு கேளா,
        ஒருமிடா ஒருவாய் ஆக
            உண்டன உறிஞ்சக் கண்டே, 
               

(663)

        வாய்அகல் அந்தப் பேயின்
            வயிற்றிடை, மற்றோர் வன்பேய்,
        காயவெங் கூழ்இறைத்த
            கைவலிப்பு ஆறி நின்றே,             
       

(664)

        வயிற்றினைப் பார்த்துப் பார்த்து
            வார்த்தகூழ் மடுத்து, வஞ்சர்
        எயிற்றுஇள இஞ்சி யைத்தின்று,
            ஈர்ச்சுவிட்டு ஈர்ச்சு விட்டே,  
              

(665)