பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

96

என

        என்றென்று பாடிஇடித்
            தது,யானைச் செவிமுறத்தால்
        ஒன்றொன்று தெள்ளியமா
            ஒன்பதுபேய் கொடுவரவே,  
                 

(650)

        “அம்மா!இம் மாஅளிக்”கென்று
            அரைமாவை ஏற்றமறைக்-
        கைம்மாயம் அறியாத
            கவற்பேய்கள் எடுத்திடவே,
                

(651)

        அடுப்பருகும் புடைப்பருகும்
            அடுபடைப்பேய் பலநின்று,
        துடுப்பருகும் சுழல,அடி
            சுண்டாமல் துழாவினவே.  
                 

(652)

    ‘புடைப்பு’: அடுப்பின் பகுதி.’ அடுப்பின் கீழ்ப்புடையை மீ அடுப்பு என்றலும்’ தொல்காப்பியம் சொல். சேனாவரையர் மேற்கோள்.

        முடியநெடும் பொழுதெல்லாம்
            முரணியபேர் இரணியனார்
        கொடியமனம் என,நின்று
            கொதித்தனகூழ் குழிசியவே.
                

(653)

        “பற்றிஇனி இழியவிடும்
            பதம்காணும்” எனப்பழைய
        கொற்றிஇனம் இயம்புதலும்
            குறள்கள்பிடித்து இறக்கினவே.     
          

(654)

        முற்பட இழித்த கூழை
            முத்தவெண் குடைக ளான
        நற்பரி கலத்தில் ஏற்றி,
            நாயகிக்கு என அமைத்தே,  
              

(655)

        களப்படு படைச்சே கண்டி
            காதுகோல் ஏற்றி, ஆங்குஓர்
        குளப்படி பொரித்திட்டு, உக்க
            குஞ்சர மதநெய் வார்த்தே,   
                   

(656)

        ஒத்தள வுடைய வாகு
            உயர்மணிக் கால்கள் ஆக,
        மத்தளம் கவித்து மேன்மேல்
            வரிசையாய் வைத்துக் கொண்டே,                 

(657)