பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

95

New Page 1

        முன்அடர்த்த இரணியன், “நீ
            மொழிந்தவன் எங்குஉளன்?” என்னச்
        சொன்னிடத்தில் உளன் என்னே!
            சும்மேலோ சும்உலக்காய்!
                      

(642)

‘சொன்னிடத்தில்’: சொன்ன இடத்தில்

        மூன்றுருவம் ஒன்றான       
            முதலுருவம், மதலைஎதிர்
        தோன்றுவது தூணிடைகாண்,
            சும்மேலோ சும்உலக்காய் 
                 

(643)

        விளைத்தபெருஞ் சினக்கனக
            மேருநெடு வரைநடுவு,
        துளைத்ததொரு திருஉகிர்காண்
            சும்மேலோ சும்உலக்காய் 
                 

(644)

        எடுத்தகையோ, வரைமார்பம்
            இடந்தகையோ, குடர்மாலை
        தொடுத்தகையோ அழகியது?
            சும்மேலோ சும்உலக்காய்!
                      

(645)

        கோள்மாலை வாளவுணர்
            குடர்மாலை, கோளரிக்குத்
        தோள்மாலை ஆனதுகாண்,
            சும்மேலோ சும்உலக்காய்  
                

    (646)

‘கோள் மாலை’: கொள்ளும் இயல்பு.

        ‘இல்லைவரம்பு’ எனக்கனகன்
            எனைஊழி நாள்படைத்த
        தொல்லைவரம் தொலைந்ததுகாண்
            சும்மேலோ சும்உலக்காய்!                       

(647)

        வீண்நாட்டம் தவிர்ந்து இனிநாம்
            விளம்புவது, வெளிப்பட்ட
        தூண்நாட்டும் தச்சனைக்காண்.
            சும்மேலோ சும்உலக்காய்!                       

(648)

        ஊண்இன்று நாம் பெற்றது
            உடன்றுஅன்று; நளன் நட்ட
        தூண் நின்ற நிலைஅன்றோ?
            சும்மேலோ சும்உலக்காய்!”     
                

(649)

    உணவின்றி இருந்த நாம் இன்று உணவுபெற்றது போர் செய்ததால் அன்று; நளன் நட்டதூண் நின்ற நிலையால் ஊண் இன்று பெற்றோம்.