பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

94

உலக

        உலக்கையாய் யானையின் உயர் மருப்பையே
            வலக்கையும் இடக்கையும் மாறி வாங்கியே
           

(633)

        மால்அகத்து இருந்தமை, வையகத்துஒரு
            பாலகன் தெளிந்தமை பாடிப்பாடியே,               

(634)

        சடங்குதரு முனிவேதம்
            தானவர்கோன் மகன்ஓதத்
        தொடங்குதலும் முடிந்ததுகாண்
            சும்மேலோ சும் உலக்காய்!
                      

(635)

        ஓதிமுடி யாமதலை
            ஓதிமுடித் தமைஉணர்வார்,
        சோதிமுடி வானவர்காண்.
            சும்மேலோ சும் உலக்காய்!  
                    

(636)

        “என்அதுதான்?” என வினவி
            எரிந்தெழுதா னவற்குமகன்
        சொன்னதுநான் மறைப்பொருள்காண்.
            சும்மேலோ சும் உலக்காய்! 
                     

(637)

        பணிந்தவனை முனிந்து,அவுணன்
            பாதகத்தாற் கொலைசூழ்ந்து
        துணிந்தவினை துணிந்ததுகாண்.
            சும்மேலோ சும் உலக்காய்!                       

(638)

        அஞ்சாது திருமேனி
            அணுகின நாள் அறங்களவை
        துஞ்சாது பிழைத்தனகாண்
            சும்மேலோ சும்உலக்காய்!     
                 

(639)

        சீற்றமுடன் பொரவந்த
            திசையானை சிறுவனுக்குத்
        தோற்றுஅழிந்த மருப்புஇவைகாண்
            சும்மேலோ சும்உலக்காய்!                       

(640)

        வாங்குதிரை முந்நீரில்
            மதலையொரு மிதந்தமலை,
        தூங்குஅமளி ஆனதுகாண்.

            சும்மேலோ சும்உலக்காய்!    
                     

(641)