New Page 1
தேங்கிய குருதி யாற்றில்
தெளிந்தநீர் தேடிஓடி,
ஓங்கிய புரிசைஏறி,
உடுத்தவை எடுத்து ஒலித்தே,
(621)
ஆடின குருதி நீரில்
அணங்கொடு கணங்கள் எல்லாம்
கூடின, கரையில் ஏறிக்
கூழ்அடும் இடம் குறித்தே.
(622)
ஆகுலம் பரந்த போரில்
அறுகுறைக் கால்கள் நாட்டிக்
காகமும் பருந்தும் இட்ட
காவண நிழலிற்
புக்கே,
(623)
நிணத்துகில் விரித்துச் சாத்தி
நீண்டசெஞ் சடைமுடித்துப்
பிணத்தின்மெல் அமளி ஏறிப்
பெண்ணணங்கு இருந்த
பின்னை,
(624)
படைப்பேயின் முதன்மைப் பழம்பேயில்
ஒருபேய்,
“மடைப் பேய்கள் எல்லாரும்
வரு”கென்று-
அழைத்தே,
(625)
படைவாகை அசுரேசர் பலமவுலி நிரையால்,
அடைவாக ஒருபால் அடுப்பாக
வைத்தே,
(626)
கம்பக் களிற்றின் கழுத்தற்ற
கூளிக்
கும்பப் பெரும்பானை கொண்டேற
வைத்தே,
(627)
கழுகும் பருந்தும் கவர்ந்துஉண்
கவந்தத்து
ஒழுகும் பெருஞ்சோரி
உலையாக விட்டே,
(628)
வெற்றித் தனித்தண்டு வெவ்வேறு
கொண்டே,
சுற்றித் துழாவும்
துடுப்பாக வைத்தே,
(629)
கொல்வீரர் பார்வைக் கொடுந்தீயை
ஊதா,
வில்வீரர் கணைவாரி விறகிட்டு
எரித்தே,
(630)
கொல் உகிர்ப்படைஅடும்
கொடிய தானவர்
பல்உகுத் தனபழ அரிசி
ஆக்கியே,
(631)
தூவடி வாள்உகிர் துணித்து அடுக்கிய
பாவடி அடிஉரல் பல பரப்பியே,
(632)
|