14
14. கூழ் அடுதல்
என்றுசெருக் களம்காட்டி,
“இனிநாம்இங்கே
இருந்துகூழ் விருந்துண்பது’,
என்னக்கேட்டு,
நின்றுசெருக் கியகணங்கள்,
அணங்கைவாழ்த்தி
நீந்தரிய குருதிநெடுங்
கடலில் பாய்ந்தே,
(614)
முழுகா, எழுந்துஒன்றின்மேல்ஒன்று
வீழா,
முகத்துஏற வீசா, மிகைத்துஏறு
சுழியோடு
ஒழுகா, அழுந்தா, மிதந்தோடிவாரா,
உவந்தோடி விளையாடல்
ஒருகோடி உளவே.
(615)
“ஆர்காண வல்லார்இவ் ஆழத்தை”
என்னா,
அலைத்தாடு சிலபே யினைத்தேற,
அயலே
“நீர்காணும் இந்நீரின் நிலை”என்ன
மூழ்க,
நெடும்பேய்கள் எல்லாம்அந்
நிலைகண்டுநின்றே,
(616)
திரைமண்டு செஞ்சோரி நீரிற்
குளித்துத்,
திளைப்பே விரும்பும்
களப்பேய்கள் எல்லாம்
இரைபண்டு காணாத ஆகத்து இளைப்பால்
இடைக்கே பிணக்குன்றில்
ஏறிக்கிடந்தே,
(617)
வழுக்கும் குழம்பானது அருகென்று,
நடுவே
வலித்தோடு புனலாட வன்பேய்கள்
முன்போய்,
இழுக்கும் பெருஞ்சோரி வெள்ளத்தின்
உட்புக்கு,
யானைப் பிணத்தெப்பம்
ஏறிப் பிழைத்தே,
(618)
சூளிகை தலைசரிந்த
சோணித கோலவீதி
மாளிகைச் செங்கல் வாங்கி,
வடிம்பொடு முதுகு தேய்த்தே,
(619)
‘சூளிகை மழை முகில் தொடக்கும் தோரணமாளிகை’ ( கம்பர்
)
வளமனை நகர வாயில்
வருதிரைக் குருதி
யாற்றில்,
இளமணல் எக்கர் வாரி
எயிற்றுடன் பற்கள் தேய்த்தே,
(620)
‘வளமனை நகர’: வளமிக்க வீடுகளையுடைய நகரம்.
|