பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

91

New Page 1

        “அற்றகுறைத் தலைபாரீர்! ஆட ஆட
            அலைகுருதிப் புனல்பாரீர் அவற்றின் தோற்றம்,
        பொற்றைவரைப் புதல்சுடுவார் சுட்டுப் போனால்,
            புனத்துஎரிகட் டைகள்போலும் பொலிவும் பாரீர்!      

(612)

‘பொற்றை வரைப்புதல்: சிறு மலைப்புதர்

        “பாறுஆடும் நிழல்பாரீர்! சுழல ஓடும்
            பசுங்குருதிக்கு எதிர்களிற்றின் பல கரத்தால்,
        ஆறு ஆகும் படிவகுத்த துறையைப் பாரீர்!
            அமர்க்களத்துஅவ் விடம்இருந்தஅழகைப் பாரீர்!”
    

(613)