New Page 1
“வச்சிரத்தால் மலைந்தமலைக் குலங்கள்
என்ன,
மாருதத்தால் மடிந்தமழைக்
குழாங்கள் என்னப்
பச்சிரத்த நெடுங்கடலின்
நடுவே தோன்றும்
பாவடியின் பிணக்குவைகள்
பாரீர்! பாரீர்!
(605)
“அந்தமிலா மலைமருப்பும்
மருப்பின் மேல்வீழ்
அரசர் நெடுங் குடைவனப்பும்,
அந்திவானில்
வந்தபிறை மதியும்நிறை மதியும்
சேர
வைத்தவிசும்பு ஒத்திருந்த
வண்ணம் பாரீர்!
(606)
யானையின் வளைந்த தந்தம் பிறைமதிக்கும், அரசர் குடை
முழுமதிக்கும் உவமை.
“வெங்குதிரைப் பிணம்சுமந்து குருதி
யாற்றின்
மிசைஓடும் கொடிநெடுந்தேர்,அசையும்
காற்றில்
பொங்குதிரைக் கடல்மேலாய்
பாய் பிரிந்து
போனகலம் எனத்தோன்றும்
பொலிவைப் பாரீர்!
(607)
“கொண்டோடும் மேலாளும் தானும்
காலாழ்
குரதுரங்கம் பல தரங்கக்
குருதி நீரில்,
பண்டோடும் பரிசயத்தால்
படர்வ தென்னப்
பரந்தோடி வரும்துழனி பாரீர்!
பாரீர்!
(608)
குரதுரங்கம்: குதிரைக் குளம்பு, குதிரைக்கும் வீரனுக்கும்
முன்இருந்த தொடர்பு அறாது குருதி ஆற்றிலும் படர்கிறது.
“வாரீர்!நம் கணம்இங்கே வாரீர்!வாரீர்!
மகிழ்நர்படும் களம்தேடி
வந்து,மாதர்
பார்ஈரம் படுகுருதிச் சேற்றில்ஆழ்ந்து,
படாதுபடும் பெருந்துயரம்
பாரீர்!பாரீர்!
(609)
“புகநடந்து நெருங்கினரைத் திருக்கரங்கள்
பொருதசெருத் தொழில்அறியார்,
புணந்தார்மார்பில்
நகம்நடந்த வடுநோக்கி,
நகையா நின்றே
நயனவேல் முத்துதிர்ப்பார்
நலமும் பாரீர்!
(610)
‘செருத்தொழில் அறியார்’: முதற்போரில் சென்று இறந்தவர்.
‘கை நடந்த வடு’: முன்நாள் இரவில் இப்பெண்ணின் கை நகம் அவ்வீரன் மார்பை வடுச் செய்ததை
இப்போதுகண்டு முத்துப்போல கண்ணீர் உதிர்ப்பாள்.
“கோபுரமே துடுப்பாக, மதிலூ டேற்ற
குருதி உலை நீராகக்,
கொடியோன் வாழ்ந்த
மாபுரமே கலமாகப், பெருங்கூழ்
ஆக்கி
வைத்த செயல் ஒத்திருந்த
வண்ணம் பாரீர்!
(611)
‘மா புரம்’: சோணிதபுரம்
|