பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

89

13

13. களம் காட்டல்

        அன்னையும் அருகிருந்த
            அலகையின் பெருங்குழாமும்
        முன்னையில் எண்மடங்கு
            முகமலர்ந்து அகமலர்ந்தே,                    

(598)

        “இன்ன வாசகத்தை யாவர்க்கு
            இயம்பலாம், இதனைஇப்பேய்
        சொன்ன வாறு?”என அணங்கு
            சுடர்முடி துளக்கம் செய்தே,     
          

(599)

        “சந்தவாக் குடைய செஞ்சொல்
            தலைமையின் உயர்ந்தவர்க்கும்
        இந்தவாக் கில்லை; பேய்வாக்கு
            இருந்தவா!” என வியந்தே 
                  

(600)

    ‘சந்த வாக்கு’: இன்சொல். செஞ்சொல் கவிஞர் வாக்கும் இப்பேய் வாக்கை ஒவ்வாது.

        “வாசிகை இதழித் தாரும்
            மணமலி நிணப்பூம் பட்டும்
        பேசிய வரிசைக்கு ஏற்பப்
            பெறும் படி கொடுக்க!” என்றே
               

(601)

        அடுபடை அவுணர் வெள்ளம்
            ஆயிரம் கோடி பட்ட
        படுகளம், கடிதிற் சென்று
            பார்த்தும்”என்று ஆர்த்தெழுந்தே,           
     

(602)

        ஓடிய கணங்கள் எல்லாம்
            ஒருவரை ஒருவர் முற்பட்டு,
        ஆடியும் எழுந்தும் செல்ல,
            அமர்க்களம் அதனைக் கண்டே,                 

(603)

        பி்ணங்கள்மிக் குயர்ந்த குன்றில்
            பெரியதோர் குன்றில் ஏறிக்,
        கணங்களுக்கு அணங்கு, நின்று
            களத்தினைக் காட்ட லுற்றே
                  

(604)

‘கணங்களுக்கு அணங்கு’: பேய்க்கூட்டத் தலைவி.