பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

88

        மாகனக முடிபுனைந்த மதலையைநீ
            நோக்கு”கென வள்ளல் சொல்லக்,
        கோகனக மலர்மடந்தை குழைதொடர்ந்த
            மதர்விழியால் குளிரப் பார்த்தே,       
        

(592)

        “அறம்திருந்தி மறைதழைக்க, அமரர்எலாம்
            களிகூர, அநேகம்காலம்
        மறந்திருந்த வாய்மைநெறி வழுவாமல்
            மனுநெறியால் வாழ்க” என்றே, 
               

(593)

‘மறந்த மறையும் மழுங்கிய மந்திரமும்
இறந்த தெய்வங்களும் எல்லாம்முன் எங்கு உறைந்து, எங்கு இயன்ற?
அறம் தரும் கோயில் அரங் கன் அவ் ஆளரிக்கு ஆளரியாய்ப்
பிறந்தபின் அன்றோ பிறந்து பெருகிப் பிறங்கியதே’

(திருவரங்கத்து மாலை)

        வரம்கொடுத்து, வலிகொடுத்து, வான்நாடர்
            சூழ்ந்துஇறைஞ்ச வாழ்ந்திருக்கும்
        தரம்கொடுத்து, நான்முகற்கும் சதமகற்கும்
            தனித்தனிதண் ணளிகொடுத்தே,
               

 (594)

        மைந்தனைஅங்கு அரசிருத்தி வாசவனை
            யுடன்இருத்தி, வானோர் எல்லாம்
        சிந்தனைதீர்ந்து அகம்மகிழத் திசைமுகனார்
            உலகளவும் சேணில் சென்றே 
               

(595)

        தாய்அனைய நரசிங்கம் தாய்அலர்மேல்
            மடந்தையொடும் தங்கள்வீட்டில்
        போயினபின், உன்அடியேன் பொன்னுலகத்
            திடைநின்றும் போந்தது” என்றே.   
               

(596)

‘என்றே’: கூளி சொன்னது இது காறும்.

        “ஆனபடிஇது; கொடியோன் அழிந்தபடி
            இது;நெடியோன் அரசிருத்திப்
        போனபடிஇது; களப்போர் புகுந்தபடி
            இது” என்று புகலக் கேட்டே,                

(597)