பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

87

New Page 1

        “எம்மைஆ தரிக்கு மாபோல்
            இம்பரும் உம்பர் தாமும்
        மெய்ம்மையால் உன்னை ஏத்தி
            வீடுபெற் றிருக்க” என்றே, 
                   

(585)

    இரணியன் வதைப் படலம் 171

        “என்னதே உன்னது ஆவி,
            யாமும் எம்உயிரும் எல்லாம்
        நின்னதே” என்னா நின்ற
            நீர்மையான் நினைப்பில் இட்டே,  
              

(586)

        பூமகனை அவன்மகனைச் சதமகனை
            முகம்நோக்கிப் “புவனம் காக்கும்
        கோமகனை அமரர்கரம் குவிக்கும்வகை
            அபிடேகம் குவிக்க” என்றே,
                 

(587)

    ‘பூமகன்’: பிரமன். ‘அவன் மகன்’: சிவன். ‘சதமகன்’: ஆயிரம் வேள்வி இயற்றி இந்திரனானவன்.

        நால்திசையும் பரந்துஇமையோர் நல்லமறை
            மொழிமுதலால் “பல்லாண்டு” என்று
        போற்றிசெய, மிசையெழுந்து புரந்தரன்தன்
            பொன்நகரம் புக்குஇருந்தே 
                  

(588)

        இந்திரன்நின்று உரிமைசெய, இளமதலை
            ஆசனத்தில் இனிது இருக்கச்,
        சந்திரன்வெண் குடைநிழற்றத் தழல்வேள்விச்
            சடங்கு ஆயனார் சமைத்தபின்னே,              

(589)

        நம்முடைய குலமதலை நல்தவத்தை
            விளம்புவதென்? நாயனார்தாம்
        தம்முடைய கரதலத்தால் தடமகுடம்
            தாங்கி அவன் தலைமேல் வைத்தே,
            

(590)

    ‘நாயனார்’: நாயகனார் என்பதன் குறுக்கல் விகாரம் இங்கு திருமால். இரணியன் வதைப்படலம் 175

        “தானவர்க்குத் தலைவன்எனும் தரமல்லன்,
            சனகாதி முனிவருக்கும்
        வானவர்க்கும் தலைவன்” என, மதலையவன்
            தடந்தோளில் மாலையிட்டே,                

(591)

    இரணியன் வதைப்படலம் 172