New Page 1
“கழிந்ததுஎன் துயரம்” என்னாக்
கற்பக நாடன் கையால்
பொழிந்தபூ வழிந்த வெள்ளப்
பூத வண்டு இசைகள் ஆர்த்தே,
(578)
‘பூத வண்டு’: “தேன் அன்றி வேறு எதுவும் உண்ணாததால் தூய
வண்டு.
“இத்தனை முனிய உண்டோ?
விலக்”கென விலக்கும் செய்யாள்
முத்தென விளங்கும் சோதி
முறுவலாள் முனிவர் சூழ்ந்தே,
(579)
கனகனை நோக்கி நோக்கிக்
கனன்றகண், காதல் செய்த
அனகனை நோக்கி நோக்கி
அரவிந்த மலர்கள் ஆய,
(580)
“வருக!என் துணைவன் இங்கே
வருக!” என்று அருளி வள்ளல்,
ஒருகைகொண்டு அணைத்துப் பின்னை
உச்சிமேல் ஒருகை வைத்தே,
(581)
“தாதையை நீயும் காணச்
சலத்தினால் தவறு செய்த
பேதைமை நம்பால் உண்டு, இப்
பிழையைநீ பொறுத்தி”
என்றே,
(582)
நரசிங்கம் தான் செய்த பிழையைப் பொறுக்குமாறு பிரகலாதனிடம்
கூறுவது இக்காவியத்தில் புதிது.
“இன்றுஇவை பொறுத்து நின்றாய்,
இனிப்பிழை செய்தாரேனும்,
கொன்றுஉயிர் களைகிலோம்நின்
குலத்துளார் தம்மை” என்றே,
(583)
இரணியன் வதைப்படலம் 168
“அலகிலா இன்பம் எய்தி,
அன்ப! நீ எம்மைப்போல
உலகெலாம் உய்யும் வண்ணம்
ஊழிநாள் வாழி” என்றே,
(584)
இரணியன் வதைப் படலம் 170
|