பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

85

புவ

        புவித்தலமுற் றளித்த புரைப்
            புழைக் கை மதப் புகர்க்கார்,
        செவித்துளை கெட்டு உயிர்த்துஅலறத்
            திகைத்து இரியச் சிரித்தே,
                    

(570)

    ‘கார்’: கரிய ( திசை ) யானை, ஆகுபெயர்

        அவ்வகை அவுணன் ஆகம்
            பிளந்துஅளைந்து ஆர்த்தசிங்கம்
        எவ்வகை உலகும் அஞ்ச
            எழுந்துமேல் நிமிர்ந்து நின்றே,       
         

(571)

        குலவரை இடங்கள் தோறும்
            குரை கடல் குழிகள்தோறும்
        சிலவரைத் தொடர்ந்துபோன
            திருக்கையின் வரவு பார்த்தே, 
              

(572)

        அப்பினை உருவி, அப்பால்
            அண்டங்கள் தோறும்புக்குத்
        தப்பின சிலரைத் தேடும்
            தடக்கையின் வரவு பார்த்தே,
                

(573)

        தன் புலம் புகாது போன
            தானவர் சிலரைத் தேடி,
        வன்பிலம் பிளந்து புக்க
            மலர்க்கையின் வரவு பார்த்தே,   
            

(574)

        தந்தையை எதிரே கொல்லக்
            கண்டு, இறை தளர்வுறாத
        சிந்தையும் தானும் நின்ற
            திருமகன் தெளிவு பார்த்தே,  
             

(575)

    இரணியன் வதைப்படலம் 166

        “அன்னை,இச் சீற்றம், நீயே
            ஆற்று”கென்று, அமுதில் வந்த
        பொன்னையும் கொண்டுஅணைந்த
            பூமகன், தனிமை பார்த்தே,
                   

(576)

    இரணியன் வதைப்படலம் 163

        “போற்றிநின் கழல்கள் போற்றி!
            புராதனா போற்றி!” என்றுஎன்று
        ஆற்றினர் அமரர் எல்லாம்
            ஆர்த்தெழும் தன்மை பார்த்தே, 
              

(577)