பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

109

New Page 1

துவக்கி

- கட்டி 577

துவர்

- செம்மை [காப்பு]  

துழனி

- ஒலி 618

துளங்குதல்

- நடுங்குதல் 354,577

துளும்பி

- உலைந்து, வருந்தி 317

துற்ற

- நெருங்கிய 492

துண் என்று

- திடுக்கிட்டு 458

தூசி

-

முன் அணி

480
கொடிப்படை 146,250

தூம(ம்)

- புகை 68

தெரித்தல்

- எழுதல், தெரிவித்தல், மாறுபடுதல் 500

தெளிவினம்

- ஒளிக் கூட்டம் 502

தெளிவு

- தற்காட்சி 502

தெறிவர

- முறிய 504

தேக்கிடுதல்

- நிறைவால் ஏப்பம் இடுதல் 678

தொடை

- மாலை 48

தொழில்பத்தர்

- சிவபெருமான்

தோகை

- முன்தானை, தலைமயிர் 693

தோமரம்

- எறியும் இருப்புப் படை 488

தோல்

- யானை 521

நகில்

- முலை 498

நகை

- ஒளி 451

நடத்தொழில்

- நாட்டியம் 99

நடலை

- பொய், வஞ்சனை 454,557

நவில்தல்

- சொல்லுதல் 137

நளன்

- ஓர் சிற்பி 659

நாகங்கள் : 8

-

வாசுகி, அனந்தன், தக்கன், சங்க பாலன், குலிகன், பதுமன், மகா பதுமன், கார்க்கோடன் இவை எட்டு திக்குகளிலும் பூமியைத் தாங்குவன. நடுவில் ஆதிசேடன் தாங்குவான்.

348

நாகரிகன்

- சதுரன், சமர்த்தன் (பிங்கலம்) 307

நாயனார்

- நாயகன் + ஆர் - (ஆர் சிறப்பு விகுதி) ‘க’ இடைக்குறை 600

நால

- தொங்க 143

நான்மறை

- ரிக், யஜு ர், சாம, அதர்வ வேதங்கள் 422

நிரை

- வரிசை 486