பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

55

        வான்அமுத புனல் இன்றும்
            மாறாத மழை. வையம்
        தான்அழுத புனல் இன்றும்
            தணியாத பலஆறு.                        

(352)

        குன்று அழுத புனல் இன்றும்
            குறையாத நிறை அருவி.
        அன்று அழுத புனல் இன்றும்
            அடங்காத கடல் ஓதம்.          
            

(353)

    வான் அமுத புனல் மழையாகவும், வையம் அமுத புனல் ஆறாகவும், குன்று அமுத புனல் அருவியாகவும், கண்ணீர் கடலாகவும் இயற்கை அன்று தொடங்கிய அழுகை இன்னம் ஓயவில்லை.

        கண்துளங்க, நின்றவர்தம்
            கால்துளங்கிக் கைவிதிர்ப்ப,
        மண்துளங்க, மதலையவன்
            மனம்துளங்கா திருந்தனனே.                

(354)

        செற்றவர் எறிந்தன படைக்கலம்
            எலாம்அருகு சென்றில சிதைந்துஇடையிலே
        இற்றன; முறிந்தன; புகைந்துஎரி
            எழுந்தன; மறிந்தன விழுந்துஅழியவே,               

(355)

        அன்றுஅவை இழந்து, உயிர் அடங்கலும்
            நடுங்க வுணனார் கழல்இறைஞ்சி, அடைவே
        நின்றனர்; வெறுங்கையொடு இருந்தனர்,
            “அவன், செய நினைந்ததுஇனி என்கொல்?” எனவே     

(356)

        “விட்ட பொழு திற்கருவி கட்டினன்.
            இனிக்கொல விடாதுஅவனை, வேதனைமிகக்
        கட்டழல் விடா அரவு பற்றிவிடு”
            கென்றுஅவுணர் காவலன் மிகக்கடுகவே,            

(357)

    ‘கருவி கட்டினன்’: ஆயுதங்களை மந்திரத்தால் நிறுத்தினான்.

        வன் பணி யின்குலம் “மன்னன்அழைத்தனன்
            வருக” எனும் பணியால்,
        “என் பணி? என் பணி?” என்றுஎதிர் சென்றுஇரு

            நாலு பணிந்தெழவே,                   

(358)