New Page 1
“வாயால்உரை செய்வது, அவன்பெயரே.
வழிபாடு விடாதது, அவன்கழலே.
காயாமலர் வண்ணன்அ லாதுமனம்
கருதாதுஇனி என்கொல்
கருத்து” எனவே,
(345)
துடித்தது நெளித்த புரு வக்கடை.
விழிக்கடை
சுருக்கொள விழித்தது.
அகல்வாய்
மடித்தது, கடித்து, எழுசினத்து
வடவைக்கனல்
மடுத்தது மனத்தி னிடையே.
(346)
சினந்தோன் மெய்ப்பாடு
மடுத்தெரி கொளுத்திய சினத்தொடு கொதித்தவன்,
“மதித்தகொலை கற்றவர்கள்தாம்,
எடுத்தெறிமின்! எற்றுமின்!
எனக்குஇவன்மிகப்பகை”
எனப்பல உரைத்து அடரவே,
(347)
அடித்தனர்; பிடித்தனர்; அழித்தனர்;
பழித்தனர்;
அதிர்த்தனர்; விதிர்த்த
கொலைவாள்
எடுத்துஉறை கழித்தனர்; கழிக்கவும்,
அதற்குஇறை
சலித்திலன் மறைத்தலைவனே.
(348)
‘இனிக்கொடு புறப்படு’ கெனக்கட
கழிக்கிடை
இருத்தினர். வளைத்து
இரவிசூழ்
பனிக்குலம் எனப்பல கொலைத்தொழில்
நினைத்தவர்,
படைக்கலம் எடுத்து எறியவே,
(349)
‘கடகழி’: கடைக்கழி, ஊர்ப்புறம்
மழுத்திகிரி, வச்சிரம், அடற்பகழி, கப்பணம்,
மதித்த கொலை பத்திரம்,
ஒள்வாள்,
எழுக்கொழு எனப்பல எடுத்திடு
படைக்கலம்
எடுத்தனர் அடுத்தெறியவே,
(350)
வயிறலைத்து, முலைகொன்று,
வாள்அவுணர் மகளிர் எல்லாம்
எயிறலைத்த வாய் அலற
ஏங்கி அழுது இரங்கினரே.
(351)
‘முலைகொன்று முலையை வருத்தி மார்பில் அடிப்பதால் ‘முலைபொலி ஆகம் உருப்ப நூறி’ ( புறநானூறு )
|