பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

53

அளவ

        அளவி லாதசினம் உடைய கோளரியை
            அரியகா தலுடன் அடிபணிந்து,
        இளவி யானைமுறை பரவினால்இறை
            இரங்கு மோ?” என நெருங்கியே,            

(337)

    இரணியன் வதைப்படலம் 56.

        “சொல்லொணாதபெயர் சொல்லி நீ மிகை
            தொடங்கி னாய். அது கிடக்க,முன்
        கொல்லொணாதபடை வெல்லொணாதுபல
            கூறல் என்கொல்?” என ஆறியே,            

(338)

    முன்னே நடந்த போரில் என்னைக் கொல்ல முடியாத படைக் கலங்கள் இப்போது என்னை வெற்றி காண முடியாது.

        “பேதை நீபெரிதும். ஆத லாற்பிழை
            பொறுத்தனன். கலை அனைத்தும்மேல்
        வேத நீதியை வகுத்த வாய்மையை
            விளம்பு போ!” என விரும்பியே,                 

(339)

        “இன்று நான்மொழிவது ஒன்றுகேள்!” என
            இருந்த ஆசனம் இழிந்துஅவன்
        துன்று வார் கழல் பணிந்துநின்று, அறிவு
            தூய மாமதலை சொல்லுமே:                 

(340)

        “ஒன்றாய், ஒருமூ வுருவாய், இருபேர்
            ஒளியாய், உடலாய், உயிராய், உணர்வாய்,
        அன்றுஆம் எனலாய், அறிவார் அறிதற்கு
            அரிதா னவன்ஆ ரணகா ரணனே.             

(341)

        “அவனே நிலம்நீர், அவனே எரிகால்;
            அவனே புயல்சூழ் அகல்வானமெலாம்;
        அவனே மலையேழ்; அவனே கடலேழ்;
            அவனே அவன்ஏ கசரா சரனே.                  

(342)

        “திருமா மகள், பார் மகளே புணர்வார்
            திசைநான் முகனே மகன்; மற் றவனுக்கு
        ஒருமா மகனார் சிவனார்; உலகே
            ழையும்உண் டவன்மீள உமிழ்ந்தவனே.              

(343)

        “எச்சில்சிறு தேவரை எண்ணுவனோ?
            இடையேசில பேர்இனி ஓதுவனோ?-
        நச்சுப் பணநாகணை யில்துயிலும்

            நாராயணன் நாமம் நவின்றபினே.

(344)