பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

52

New Page 1

        முன்னம் ஓடைமலை ஓட, விண்பறவை
            முடுகி ஓட, அதன்இடை விடாது
        அன்னம் ஓட, விடைஓட, ஓடும்வகை
            அடைய வானவர்கள் அறிவரே,                

(331)

    ஓடைமலை: யானை, இந்திரனுடைய ஊர்தி. விண்பறவை: கருடன், திருமாலுடைய ஊர்தி, ஓதிமம், அன்னம்: பிரமனுடைய ஊர்தி, விடை: எருது, சிவனுடைய ஊர்தி.

    ‘மோடி ஓட, அங்கி வெப்பு மங்கி ஓட, ஐங்கரன் முடுகி ஓட, முருகன் ஓட, முக்கண் ஈசன் மக்களைத் தேடி ஓட’ ( திருவரங்கக் கலம்பகம் )

        “அன்று போனவர்கள் போனபின்பு,அகில
            லோகம் எங்கும் எனது ஆணையே
        சென்று போத, இடை நின்றுவா ழுமவர்
            சேமம் என்னுடைய நாமமே.                 

(332)

        “ஆதலால் அமரர் அஞ்சி வந்துஅடி
            வணங்கு வார். எனை அறிந்துவைத்து,
        ஓதல்ஆயது பயின்ற தாருடன்?
            உரைத்தி ஈது” என உறுக்கியே.                 

(333)

    ‘யார் கற்பித்தார்?’ எனாது, ‘யாருடன் கற்றுக் கொண்டாய்?’ என்பன். ‘உபாத்யாயன்’ என்ற சொல் ‘உடன் படிப்பவன்’ என்ற பொருள் தரும்.

        “கற்க நாஎழுவ தோ? அடா! எனது
            காவல் ஆணைகட வாதபேர்
        நிற்க, நான்அர சிருக்க, நீ இது
            நினைந்தது என்?” என நெருக்கியே,            

(334)

        “ஏனம் ஒன்றென எழுந்துவந்து, எமையன்
            ஆவி யுண்டவனை, இன்று நீ
        மானம் இன்றிஎதிர் ஓதவோஉனை
            வளர்த்தது?” என்றுஇவை கிளத்தியே,             

(335)

    ‘எம் ஐயன்’: உடன் பிறந்தான். இரணியாக்கன். இரணியன் வதைப் படலம் 51.

        “நின்ற வன்பொடு நிறைந்திருந்தஎன்
            நெடுங்குலம் கிளை அடங்கலும்
        கொன்ற வன்பெயர் உரைப்பதோ சில
            குணங்கள்?” என்று பல கூறியே,                 

(336)

    இரணியன் வதைப்படலம் 50.