பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

51

New Page 1

        “ஆன தாக! அது பேசு” எனாஅசுரன்
            ஆணை கூற எதிர் ஓதினான்-
        ஞான வாரிதரு வேத நாம
            நாராய ணாய எனும்நாமமே.                

(324)

    பிரணவம் ஒழித்த திருமந்திரத்தைத் தந்தையிடம் சொல்லுகிறான். இவ்வாறே இரணியன் வதைப்படலம் 42. ‘நாராயணா’ என்பது கம்பனிலும் உண்டு. 23-ம் பாட்டு.

        மெய்யை ஒத்ததிரு நாமம், ஆகுதியில்
            வேத வேள்வியிடை போதவீழ்
        நெய்யை ஒத்ததுஅவன் மேனி, மேல்எழு
            நெருப்பை ஒத்தது அவன்நெஞ்சமே.
             

(325)

    ‘மெய்யை ஒத்த திருநாமம்’: வாய்மையோடு வைத்து எண்ணப்படும் எட்டெழுத்து.

        “நன்று, நன்று” என அழன்று தானவன்
            நகைத்த வாய்எழு புகைக்கனல்,
        சென்று பொங்கஇரு கண்களும்கடை
            சிவந்தெ ரிந்துபொ றிசிந்தவே,                 

(326)

        விண்சுழன்று, திசை யும் சுழன்று, வட
            மேரு மால்வரை அசைந்துகீழ்
        மண் சுழன்றன. மருங்கு நின்றவர்
            மயங்கி னார்அதி பயங்கொடே.                

(327)

        ‘ஏதுஇவன் கருதி எண்ணுகின்றது? இனி
            என்செயுங் கொல்என முன்னமே
        வேதியன்குலை குலைந்துநிற்க, மிக
            வெள்ளியார் உடல் வெளுக்கவே,                

(328)

        “வாரடா சிறுவ! நீஅடாதன
            வகுக்க வல்லைஎனின் நல்லை! மற்று
        ஆர்அடா முதல்இயம் பினார்?” என
            அடங்க வானவர் நடுங்கவே,                   

(329)

        “சொன்ன பேருடைய நேமி யான்எதிர்
            நடந்த நான்அமர் தொடங்கும்நாள்
        அன்ன போரில்அவன் அஞ்சி ஓடும்வகை

            அடைய வானவர்கள் அறிவரே.

(330)