New Page 1
வேத அந்தணன் வெகுண்டு மேலுரை
விளம்பிடா உயிர் துளும்பி
“நீ
ஓத வந்தபடி போத நன்று” என
ஒடுங்கி ஆகமும் நடுங்கவே,
(317)
ஓடினான் அசுரர் பூபதிக்கு இவை
உணர்த்து வான்,ஒரு கணத்தினில்
கூடினான்,அடி பணிந்து மைந்தன்நிலை
கூறனான் உணர்வு தேறியே,
(318)
“தீயில் வந்ததொரு நஞ்சம்
ஒப்பன,
செவிக்கு இனாதசில
சொற்கள்தாம்
வாயில் வந்தன உரைத்து - மன்னவ!உன்
மைந்தன் ஓதுகிலன்” என்னவே,
(319)
இரணியன் வதைப்படலம் 35.
“என்ன வாசகம்அது” என்ன, வேதமுனி
“எம்பி ரான்அவை இயம்பிடில்,
சொன்ன வாய்கிழியும்; நாவும்
ஆவியொடு
சோரும் என்றுஉடல் துளங்கவே.”
(320)
இரணியன் வதைப்படலம் 37.
“தருக காதலனை” என்றலும் கொடிய
தாதை ஏவலொடு தூதர்போய்,
“வருக மாமதலை” என்ன, வந்துஅவனும்
மன்னவன் கழல் வணங்கவே,
(321)
ஆய காதலனை மார் புறத்தழுவி
அன்பி னோடுஅரு கிருத்தி,
“நீ
தூய வேதியன் மொழிந்திடப்
பழுது
சொன்னது என்னஉரை செய்கவே.”
(322)
இரணியன் வதைப்படலம் 39.
“எந்தை! கேள் பழுது உரைத்தி லேன்முழுதும்
நன்மையே பெற
இயம்பினேன்.
முந்தை வேதநெறி ஓதுகின்றதொரு
மூல மந்திரம்இது”
என்னவே,
(323)
|