New Page 1
“ஆ!தக வுரைத்திலை; அயர்த்தனை
அறிந்திலை. அருந்தவ!”
எனா
மேதகு கலைச்சுருதி யுட்படு
விழு ப்பொருள் விரித்தருளியே,
(310)
‘ஆ தகவு’: ‘ஆ’ வியப்புக்குறி. தகுந்தது இரணியன் வதைப்
படலம் 22.
கோதி லாவா னாடர் காதல்
கூரு வார்பே ராசை தீர
ஓதி னான்,ஓ தாத பாலன்
“ஓம்ந மோநா ராய ணாய.
(311)
‘ஓதாத பாலன்’: ஓதாது உணர்ந்தவன், இதுவும் இனி
வருவனவும் இரணியன் வதைப்படலம் 23.
“சாம மாய்,மூ வாத தேவ
சாகை யாய்,யா காதி
வேள்வி
ஓம மாய்,வீ டான நாமம்,
ஓம்ந மோநா ராய ணாய.
(312)
‘சாமம்’: சாமவேதம், பாராயணம். கம்பனிலும் பிரகலாதன்
ஆசிரியனிடம் கூறும் திருமந்திரத்தைப் பிரணவத்துடன் சேர்த்தே சொல்லுகிறான். இரணியன் வதைப்படலம்
23
“வேத மேஆ தாரம் ஆன
மேனி மால்,பா லான வேலை
ஓத நீரான் ஆதி நாமம்,
ஓம்ந மோநா ராய ணாய.
(313)
என்பெ லாம்உருகு சிந்தை மைந்தன்இவை
எட்டெழுத்தையும் எடுத்துரைத்து,
அன்பி னால்இருகையை அஞ்சலித்தருளி
ஆக மும் புளக மாகவே,
(314)
நின்று வேதியன் நடுங்கி,
“நீஇது
நினைந்த தென்கொல்?திரு
மைந்தனே!
இன்று வேரொடும் முடிந்த தென்குடி
இது என்ன பேர்
மொழிவது?” என்னவே,
(315)
“வான்அறிந்தபெயர்; மண்அறிந்த
பெயர்;
எண்நிறைந்தமதி ஒன்றிலா
நான்அறிந்தபெயர், நீஅறிந்திலைகொல்?
நாரணன்பெயர் இது” என்னவே,
(316)
இரணியன் வதைப்படலம் 27.
|