பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

48

அந

        அந்தமது ரக்கிளவி சிந்தையை
            உருக்கஅசு ரேசன் ஒருநாள்
        மைந்தனை எடுத்துவரை மார்புற
            அணைத்து மகி ழத்தழுவியே,                

        (302)

        அம்பொன்மணி மண்டபம் விரும்பிஅரி
            யாசனம் நிரம்ப, அதன்மேல்
        உம்பருடன் இம்பரும் நிறைந்துஅடி
            இறைஞ்சிட இருந்தபொழுதே,                  

    (303)

        ஒப்பரிய காதலனை ஆதரவி
            னால்இனி துணர்ந்து, ‘மகவை
        இப்பருவமே, கலைகள் ஓதுவது
            யாவரும்’ எனக் கருதியே,                    

(304)

        ஒள்ளிய புரோகிதனை, வெள்ளியை
            அழைத்து, ‘இவன் உணர்ந்துதெளியத்
        தெள்ளிஅரு மாமறைகள் பள்ளியினில்
            ஓதும்நெறி செப்பு’ கெனவே,                

(305)

        வேதியன் ஒருத்தனிடை வேதமுதல்
            நாயகனை விட்டு, ‘இவனைநீ
        ஓதுவி’ எனப், பெருக அந்தணனும்
            மைந்தனை உவந்தருளியே,                  

(306)

        “நன்று; மிக நன்றுஇறைவ! நாகரிக
            னால் அமிர்த யோகம் எனும்நாள்,
        இன்றுதிரு மைந்தனை இருத்துக
            திருத்தகு முகுத்தம்” எனவே,                   

(307)

        “எந்தைவரு” கென்றலும், இறைஞ்சினன்
            இருந்தபொழுது, “என்துணைவ! நீ
        உந்தையை நினைந்து இரணி யாயநம
            என்றுமுதல் ஓது” கெனவே,                

(308)

        சென்றுஇரு செவித்துளை புதைத்தன
            திருக்கை, சிறு பாலகன்முகம்
        கன்றின மலர்க்கமலம் ஒத்தது;
            கருத்தளவு உரைக்கஅரிதே.                 

(309)