பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

47

New Page 1

        “பெருகன்பி னால்வந்து எடுத்துஎம்மை
            ஆளப் பிறந்தான் இவன்
        முருகன்கொல்! என்பார் முகுந்தன்கொல்!”
            என்பார் புகுந்தார்களே.                       

        (294)

        பூமங்கை, பார்மங்கை, போர்மங்கை,
            ஞானப் பொருட்பால் தரும்
        நாமங்கை இவரே, நலத்தால்
            வளர்க்கும் முலைத்தாயரே.                   
   

(295)

        ஊன்வளரும் அயில்வேலான்
            உயிரனைய திருப்புதல்வன்.
        வான் வளர மண்வளர
            மறைவளர வளர்ந்தனனே.                      

(296)

        தானவர்தம் குலமதலை
            வளர்ந்ததெலாம், தனித்தனியே
        வானவர்தம் கரங்களிலும்
            மறையுணர்ந்தோர் மனத்திலுமே.                

(297)

        தடையில் அவன் ஒருவனுமே
            வளர்ந்ததுடன் சராசரங்கள்
        அடைய வளர்ந் தனஅதுஒன்றும்
            அசுரேசன் அறிந்திலனே.                    

(298)

        கார்அணி நறுங்குழல் அசைந்திட,
            இசைந்து அணி ‘கலன்’‘கலன்’எனத்
        தாரணி வருந்திய பெருந்துயர்
            கெடும்படி தவழ்ந்தருளியே,                 

(299)

        அல்நெறி அடங்கலும் அடங்கிட
            அருந்துயர் வருந்தி அகல,
        நல்நெறி மறந்தன கிடந்தவை
            தொடங்கிட நடந்தருளியே,                    

(300)

    ‘நல் நெறி மறந்தன கிடந்தவை’: அனைவரும் மறந்ததால் வீழ்ந்து கிடந்த நல்வழி.

        ஐந்துபரு வம்புகுதும் எல்லையினில்
            ஆரமுதம் ஊறு மணிவாய்
        வந்துபரு வம்குலவும் மாமறை
            கலந்தமது ரக்கிளவியே.                    

(301)