பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

46

        காணாத சிறுமருங்குல் கருவுட்காட்டக்,
           கலைதளர்ந்து, முலையிருகண் கருத்து விம்மிப்
        பூணாத கனகமுடன் குறுவேர் பூத்த
           பொலங்கொடியை இலங்கிலைவேல் பொன்னன்
                                            பார்த்தே,     
 

(287)

        “உண்டுஇவள்பாற் கருப்பம்” என விருப்பம்எய்தி,
            உலகமெலாம் தனித்தனிவந்து உவகைகூரக்
        கொண்டுஇவளை இறைபிரியாது இருந்தான், என்றும்
            கூற்றுவனும் போற்றியிடும் குணலைகண்டே,          

(288)

        ஐயிரண்டு திங்களில்நா லிரண்டும் ஒன்றும்
            ஆறிரண்டிற் பதினொன்றேஅணைந்து நிற்கச்
        செய்யவன்தேர் குணதிசையில் உதயம்செய்யத்
            திருமகனைக் கருவுயிர்த்தாள் தேவிஆங்கே.        

(289)

    ‘நால் இரண்டும் ஒன்றும்’: ஒன்பது கோள்கள். ‘ஆறிரண்டு’: மேடம் முதலான பன்னிரண்டு இராசிகள். சன்ம லக்கினத்துக்குப் பதினொன்றாம் இடத்தில் உள்ள கிரகங்களும், அவ்விடத்தை உடைய கிரகங்களும் ஊறு செய்யா என்பது சோதிட நம்பிக்கை.

        அமராட, அமர்மாதர் உடன்ஆட,
            அசுரேசன் அணிசுற்ற மா
        தவராட மடமாதர் உடனாடும்
            உரகேசர் சதகோடியே.                    

(290)

        நின்றாடும் அவராடல் புதிதல்ல
            அதுநிற்க, நெடுமால் அயல்
        மன்றாட வந்தாரும் நடமாடி
            னார்தம்மின் மாறாடியே.                     

(291)

        தாராட, வாழ்மௌலி தானாட,
            வானாடர் தவராதியாய்
        நீராடை சூழ்பாரில் ஆடாத
            பேரில்லை நெய்யாடலே.                    

(292)

        பாரிட்ட பாரம் தவிர்த்தான்
            வரும்பன்னிரண் டாகும்நாள்,
        பேரிட்ட தப்பேர் அழைத்தண்டர்
            கொண்டாடும் பிரகலாதனே.                

(293)