New Page 1
கொம்புகள் இற்றன; கிம்புரி விட்டன;
கொண்ட கொலைத் தொழில்மேல்
வெம்புக ளிற்றினம் வெஞ்சினம்
அற்றன;
மென்பிடி ஒத்தனவே.
(367)
கைம்மலை கொம்பு முறிந்தமை
கண்டவர்
காவல னைக்குறுகிச்,
“செம்மலை அஞ்சின குஞ்சரம்”
என்றுஎதிர்
செப்பினர் அப்பொழுதே,
(368)
பொங்குசினப்பகை வாள்அவுணன்
புகை
போத உயிர்த்து,
“அவனைச்
செங்கன லுட்புக விட்டு, உயிர்
சூழ்கொலை
செய்வன செய்” கெனவே,
(369)
தொட்டனர்ஆழ நெடுங்குழி; சூழ்வுற
நின்று சுமந்து சுமந்து
இட்டனர் இந்தனம்; வந்தெதிர்
வீசினர்
எண்ணெயும் வெண்ணெயுமே.
(370)
வெங்கனல் பற்றி விசும்பில்
எழுந்திட
வெண்மதி யும்கருகச்,
செங்கதிர் பச்சை நெடும்பரி
வானிடை
சென்றில; நின்றனவே.
(371)
இரணியன் வதைப்படலம் 85
‘செங்கதிர் பச்சை’: இரவியின் புரவி
அவ்வள விற்சில கிங்கரர், தம்கையில்
அற்புத னைக்கொடுபோய்,
வெவ்அழ லுக்கு விருந்து, அவி,நாவில்
அருந்து என வீசிடவே,
(372)
காய்சின வெங்கன லூடுற நின்றமை
கண்டு,உல கோர் அடையக்
கூசி நடுங்கினர்; பிள்ளைதன்
மேனி
குளிர்ந்து நடுங்கினனே.
(373)
சீதச ரோருக வாவி
கொலோ?அது
செங்கன லோ?அறியான்,
வேதசி ரோதய மாகிய நாமம்
விடாது விளம்பினனே.
(374)
|