ஆன
ஆனது கண்டவர் ஓடினர் சென்று,அனல்
அஞ்சி அவிந்துஅகலப்
போனது; மைந்தன் இருந்தனன்”
என்று
புகுந்தனர் சொல்லிடவே,
(375)
காலவிடம் ஆம்எனமுகம் கருகிடக்
கடைசி வந்த விழியான்,
“ஆலவிட வாரியுடன் அன்னமும்
அளாவி யிடு”கென்ன அவரே,
(376)
இரணியன் வதைப்படலம் 115.
கண்கவரும் இன்அடிசில் காளக
விடத்தொடு கலந்தனர்
கொணர்ந்து,
“உண்க!” என நஞ்சம்எனும் வஞ்சம்அறி
யாமதலை உண்டருளவே,
(377)
அற்றதுகொல்? உண்டதுநல்
ஆரமுதம்
ஆனதுகொல்? ஆர் அது அறிவார்?
உற்றதிரு மைந்தன்உயர் சோதிவிடு
மேனிஒரு தீதும் இலனே,
(378)
“வானிலத்தில் உயர்ந்த
கோபுர
மாட மாளிகை மீதுவைத்து,
ஊன்நிலத்துஉக விட்டெறிந்துஉயிர்
உண்க!” என்றுரை செய்யவே,
(379)
‘வானிலத்தில்’: தேவர் உலகின் 5-ம் வேற்றுமை எல்லைப்
பொருள்.
வைதுஇனாதன சொல்லி, மைந்தனை
மாட மாளிகை மீதுகொண்டு,
எய்தினார்;எழு நூறு யோசனை
ஏறினார்; பலர் தேறியே,
(380)
இரணியன் வதைப்படலம் 81
ஆளி கைக்கொடு கைக்களிற்றை
அடர்த்தல் போல, எடுத்து,மேல்
மாளி கைத்தலை நின்றுகீழ்விழ
வள்ளலைத் தனி தள்ளவே,
(381)
|