பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

59

இந

        இந்து வீழ்வது போல, வானின்
            விசைந்தெழும்தலை கீழதா
        வந்து வீழ்தரு போதும், மைந்தன்
            மறந்திலன் திரு நாமமே.                     

        (382)

முதலில் உயர வீசியதால் மேல் எழுந்து பின் கீழே விழுந்தனன்.

        அத்தலத்துஅகல் வானு ளோர்கள்
            அடங்க நின்று நடுங்க,வந்து
        இத்தலத்து விழாத முன்னம்
            இரண்டு கைத்தலம் ஏற்றவே.                

(383)

        இன்கை கொண்டவர் வைத்தொழிந்தபின்
            இந்த்ரஞால மிது ஒன்றுஎனா
        அங்கை கொண்டுஎதிர் சங்கை கொண்டுஅசு
            ரேசன்ஊர் அலமந்ததே.                    

(384)

        இரைத்து ஆர்த்து மாளிகைநின்று எறிந்தவரே
            இழிந்துஅ வுணர்க்கு இசைத்த வெல்லாம்
        உரைத்தார்க்கும் முனிவுற்றான், ஊழ்வினைவந்து
            உற்றபோது உணர்வொன்று உண்டோ?              

(385)

    ‘உரைத்தார்க்கு’ இரண்டாம் வேற்றுமை. உருபு மயக்கம்

        மண்கொண்ட மால்அருளால் மைந்தன்அவன்
            உய்ந்த செயல் அயல் நின்றார்கள்
        கண்கண்ட பொருளாகச் செவிஒன்று
            பொருள் என்றும் கருதான், ஐயோ!              

(386)

    அயல் நின்றவர் தாம் கண்ணால் கண்டதைக் கூற, இரணியன் கேட்டும் அதை உண்மை என்று கருதான்.

        உம்பர்அணி வரவென்றான் உளம்கொதித்து,
            மதித்தசெயல் உடைய மாயச்
        சம்பரனை ‘அவன்உயிரைத்தருக’ என
            மற்றவனும் தலைநின்று ஆங்கே,                

(387)

        தாயையும்வெஞ் சினம்பிறக்கின் சலம்புரியும்
            தறுகண்ணன், தரிக்க வொண்ணா
        மாயைவினைப்பல வகுத்து மைந்தனைவந்து

            எம்மருங்கும் வளைந்துகொண்டே,           

(388)