பகல
பகலிடைஇருள் படைக்குமே;
பரிதியின்ஒளி அடைக்குமே;
பருவரைகளை நடத்துமே;
பனிமதிதரை கிடத்துமே;
இகலிடுபடை எடுக்குமே;
இமையவர்களை வகுக்குமே;
எதிர்முகிலிடை ஒளிக்குமே;
எரியொடுமழை
துளிக்குமே.
(389)
*
* * *
இறையவ னையும் மயக்குமே;
இடர்எவ ரையும் வருத்துமே;
*
* * *
இவைஇவை இவன் இயற்கையே.
(389-அ)
வரவரவர மயக்குறூஉம்
மறவினைபல வகுத்துமேல்,
மதலையைமிகு சினத்தினால்,
மதியிலிஎதிர் அடர்க்கவே,
அரவணைமிசை கிடக்கும்மால்
அடியிணைதிரு மனத்தினால்,
அறிவுடைமகன் நினைக்கவே,
அவையடையவும் ஒளித்தவே.
(390)
சம்பரன் வகுத்த மாயம்
தனித்தனி அழிந்த வாறும்,
எம்பிரான் இருந்த வாறும்,
இரணியன் கேட்டு எழுந்தே,
(391)
“உடலிடை மலையைக் கூட்டி,
உரகவெங் கயிற்றாற் கட்டிக்,
கடலிடை இடுமின்!” என்னக்
காவலன் ஏவல் கேட்டே,
(392)
மைந்தனை வந்தெடுத்து,
மலையொடு மாசுணத்தால்
பந்தனைப் படுத்தி, வெய்யோர்
பரவையின் நடுவுள் இட்டே
(393)
இட்டது கிளரா வண்ணம்
எறிந்து கல் படுத்தி எற்றி
விட்டபின், எவரும் காண
விழுந்தகுன்று எழுந்ததுஅன்றே.
(394)
|