New Page 1
வேலையில் விழுந்த குன்றம்
எழுந்துமேல் மிதந்த
போது,
காலையில் இரவி அன்னான்
காட்சியை விளம்பல்
ஆமோ.
(395)
அரவினால் மலையோடு ஆர்த்த
அசுரரும் சுரரும் கேட்பப்,
பரவினான் முதல்வன் நாமம்
பாலகன், சால நொந்தே;
(396)
“சோதியே! நீதியோர்
தொழு பெருங் கடவுளே
துறவனே! அறவனே!
துணைவனே சுருதிநூல்
ஆதியே! உருவமே!
அருவமே! அமலனே!
அடியனேன் அபயம்;நான்
அபயம்;நான் அபயமே.
(397)
“மாகமே! அனி லமே!
அனலமே! சலிலமே!
வையமே! உருவமே!
யோகமே தருவதோர்
ஆகமே! மோகமே!
அறவனே! அமலனே!
அடியனேன் அபயம்;நான்
அபயம்;நான் அபயமே.
(398)
இறைவன் விண், கால், தீ, நீர்; மண் என்ற ஐம்பூதங்களும்
ஆவான்; ‘யோகமே’ ( முயற்சி ) தரும் ஆகம்’ ( உடல் ) ஆவான்; மோகத்தையம் அதை நீக்க அறத்தையும்
அவனே தருவான்; அவன் அழுக்கு அற்றவன்.
“வையம்ஏழ் உண்டவாய்
வள்ளலே! வெள்ளநீர்!
வண்ணனே! முளரியங்
கண்ணனே! வானுளோர்
அய்யனே! மெய்யனே
ஆழியங் கையனே!
அமலனே அடியனேன்
அபயம்; நான்
அபயமே.”
(399)
|