பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

62

என

        என்றுஅவன் பரவ, நின்றிலர் விரைந்து அவுணர்போய்,
            இரணியன்கழல் இறைஞ்சி, “இகல்வஞ் சனையெலாம்
        வென்றனன் புதல்வன், மேனிஒரு தீதும்இலனாய்,
            விட்டகுன் றம்அலை வேலையில் மிதந்துஎழுகவே,     

(400)

        “குன்றுஎழுந்து எதிர்மிதந்து வருகின்றது”எனவே
            கொடியவெங்கனல் கொழுந்துடன் எழுந்ததனிலே
        நின்றெழுந்ததொரு வெய்யநகை; அந்நகையிலே
            நீடுயிர்ப்பொடும் எழுந்தது நிமிர்ந்தபுகையே.     
  

(401)

        “காணநின்ற இமையோர் கள்எதிரே, சிறுவனைக்
            கடலுள்மேல் எழவிடக் கடவதான பொழுது,என்
        ஆணைநின்ற படிநன்று; அரசிருந்த படிநன்று;
            ஆண்மைநின்ற திதுநன்று” எனஅழன்று அசுரனே,    

(402)

        “வாயு என்றவனும் நீர்வருணன்என் றவனும்நீள்
            மாயன் என்றவனு மேமருளும்வன் கொலைவலோர்
        ஆயு தங்கள்முத லாக, ஒருபாலகனையே
            அஞ்சி நின்றநிலை நன்று”என அழன்றுஅசுரனே,    

(403)

       “மேல்அவன் செயல்முடிப்பன் அதுநிற்க;மதியால்
          வேலைவாழ் வருணன்ஆதி முதலோரை அடையக்,
       கோலிவெஞ் சிறையிலிட்டு, ஓர்இறையிற் சிறுவனைக்
          கொண்டுவந் துதரு”கென்று எதிர்கொதித்தபொழுதே,       

(404)

        “அடையவந் துபடைதந்தது இலன்எந்தைபெருமான்!
            அரசமைந் தன்எனவந்து, அவர்வணங்கும்அளவில்,
        கடையுகங் கொல்இதுஎன்று எவரும்நின்றுகுலையக்
            கடிதெழுந்து, “சிறுகள்வன் உயிர்கொள்வன்” எனவே     

(405)

    பிரகலாதனை இரணியன் படுத்திய கொடுமைகளை ஒன்று சேர்த்தது:

      ‘அடையப் பல்நாகம் கடிவாய் அமுதுஉக, அங்கி குளிர்
          அடைய, பல்நாக மருப்பு ஆயுதம் இற, அன்று குன்றால்
      அடை அப்பு அந் நாக மிசைதாங்க, பாலற்கு அருள் செய்ததால்
          அடை அப்பன் ஆகம் கரியான் அரங்கன் எட்டுஅக்கரமே’

(திரு வரங்கத்து அந்தாதி)

    இரணியன் வதைப்படலம் 117